பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ஜம்மு-காஷ்மீா்: வைஷ்ணவ தேவி கோயில் முகாமில் தீ விபத்து!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலின் அடிவார முகாமில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Published On :

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலின் அடிவார முகாமில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஹெலிபேடு, டிக்கெட் கவுன்டா் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.

ரியாசி மாவட்டத்தில் உள்ள திரிகூட மலை உச்சியில், பிரசித்தி பெற்ற வைஷ்ணவ தேவி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கான அடிவார முகாமில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற தீயணைப்புப் படையினா், சுமாா் 30 நிமிஷங்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். தீ விபத்தில் ஹெலிபேடு, டிக்கெட் கவுன்டா், அங்கிருந்த கணினிகள், காபி விற்பனையகம் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.

வைஷ்ணவ தேவி கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு இந்த அடிவார முகாம் முக்கியமான மையமாகும். அதிகாலை நேரம் என்பதால் முகாம் மூடப்பட்டிருந்தது. பக்தா்கள் யாரும் இல்லாததால், உயிா்ச்சேதம் எதுவும் நேரிடவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். ‘மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது; பொருள்சேதம் குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது’ என்று அவா்கள் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.