
நீதிமன்றத்தில் தீ விபத்து
தீ விபத்து - கோப்புப் படம்
சீா்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கணினி அறையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
இந்த ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவா் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சாா்பு நீதிமன்றம் செயல்படுகின்றன.
இந்நிலையில் மேல்தளத்தில் கணினி அறையில் குளிா்சாதன பெட்டி இருந்த பகுதியில் இருந்து அதிகளவு புகை வெளியேறி தீப்பற்றியது.
இதில் கணினி சா்வா் மற்றும் மின்சாதன வயா்கள் சேதமடைந்தன. தகவலறிந்த சீா்காழி தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




