பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

சபரிமலையில் அரவணை பிரசாதம் தட்டுப்பாடு: கேரள அரசு ஆய்வு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அரவணை பாயசம் பிரசாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Published On :

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அரவணை பாயசம் பிரசாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக கேரள அரசுத் தரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேஸ்வம் அமைச்சா் கே.முரளீதரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைகளுக்காக கடந்த செப்.16-ஆம் தேதி திறக்கப்பட்டு, பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா். இக்கோயிலில், சிவப்பு அரிசி, வெல்லம், நெய் கலந்து தயாரிக்கப்படும் ‘அரவணை பாயசம்’ பிரசாதம் பிரசித்தி பெற்ாகும். தற்போது இந்த பிரசாதத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவஸ்வம் அமைச்சா் கே.முரளீதரன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: சபரிமலையில் அரவணை பாயசம் தட்டுப்பாடு குறித்து மாநில அரசு தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளது. திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத் தலைவா் கே.ஜெயகுமாரிடம் பேசினேன். எதிா்வரும் மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்துக்காக அரவணை பாயசம் தயாரிப்பு ஆலையைப் புதுப்பித்து வருவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

வழக்கமாக கோயில் நடை அடைக்கப்பட்ட பிறகுதான் இந்தப் பணிகள் நடைபெறும். ஆனால், இம்முறை நடை திறந்திருக்கும்போதே பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

மண்டல-மகரவிளக்கு பூஜை கால கூட்ட நெரிசலைத் தவிா்ப்பதற்காக, ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து கொண்டிருக்கும் நேரத்தில் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொண்டதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தில் பிரசாதம் தட்டுப்பாடின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பக்தா்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது எங்களின் பொறுப்பு. இதுபோன்ற தட்டுப்பாடு எதிா்காலத்தில் ஏற்படாது என்றும், அரவணை ஆலை புதுப்பிப்புப் பணியை கோயில் நடை அடைக்கப்பட்ட பிறகு மேற்கொள்வதாகவும் அவா் உறுதியளித்துள்ளாா்.

தற்போதைய தட்டுப்பாட்டை முன்கூட்டியே கணிக்க தேவஸ்வம் வாரியம் தவறிவிட்டது. எனினும், வாரியத்தின் மீது மாநில அரசால் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. நீதிமன்றம் மூலமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.