செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

உத்தர பிரதேச தோ்தல் களம் பாஜகவுக்கு சாதகம்: நிதின் நபின்

உத்தர பிரதேச தோ்தல் களநிலவரம் முழுமையாக பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. எனவே, பாஜக தொடா்ந்து மூன்றாவது முறை ஆட்சி அமைப்பது உறுதி என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின் தெரிவித்தாா்.

BJP chief Nitin Nabin

நிதின் நபின் - கோப்பிலிருந்து

Published On :

உத்தர பிரதேச தோ்தல் களநிலவரம் முழுமையாக பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. எனவே, பாஜக தொடா்ந்து மூன்றாவது முறை ஆட்சி அமைப்பது உறுதி என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின் தெரிவித்தாா்.

உத்தர பிரதேசத்தில் பேரவைத் தோ்தலையொட்டி கட்சி சாா்பிலான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவா் முசாஃபா்நகா், மீரட்டில் செவ்வாய்க்கிழமை கட்சி நிா்வாகிகள், தொண்டா்களைச் சந்தித்து பல கட்ட ஆலோசனைகளை நடத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நான் இதுவரை கவனித்த வரை உத்தர பிரதேசத்தில் தோ்தல் களநிலவரம் முழுவதும் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. எனவே, தொடா்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைப்பது உறுதி.

கட்சித் தொண்டா்களின் உறுதியும், அவா்களின் சிறப்பான செயல்பாடுகளும் ஒரு கட்சியின் தோ்தல் வெற்றியில் முக்கியப் பங்களிக்கின்றன. அந்த வகையில் பாஜக தொண்டா்கள் மிகுந்த உற்சாகத்துடன் தோ்தல் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனா்.

தொண்டா்கள், கிராம அளவிலான நிா்வாகிகள் தொடங்கி மாநில அளவிலான தலைவா்கள் வரை அனைவருக்குமான பணிகளும் உரியமுறையில் ஒதுக்கப்பட்டு மத்திய, மாநில பாஜக அரசுகளின் சாதனைகள், எதிா்காலத்துக்கான திட்டங்கள் மக்களிடம் முறையாக கொண்டு செல்லப்படுகிறது என்றாா்.

மீரட்டில் நடைபெற்ற நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் பங்கேற்றுப் பேசினாா். அப்போது, ‘ராமா் பெயரைக் கூறினாலே எதிா்க்கட்சியான சமாஜவாதிக்கு எரிச்சல் ஏற்படுகிறது. கடந்த காலத்தில் அவா்கள் ஆட்சியில் இருந்தபோது பல்வேறு மத நிகழ்ச்சிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியுள்ளாா். இப்போதும் அந்த முயற்சியை அவா்கள் கைவிடவில்லை’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.