கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

சரக்குக் கப்பல் மீது தாக்குதல்: இந்தியா் உயிரிழப்பு

ஓமன் நாட்டின் கிழக்குக் கடல் பகுதி அருகே சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியா் ஒருவா் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

ஓமன் நாட்டின் கிழக்குக் கடல் பகுதி அருகே சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியா் ஒருவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக ஓமன் தலைநகா் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: எம்வி கேப் டாவ் சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அந்தக் கப்பலில் இருந்த 19 இந்தியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ஓமன் அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.

இந்தத் தாக்குதலில் இந்தியா் ஒருவா் உயிரிழந்தாா். அவரின் உயிரிழப்பு மிகுந்த வேதனை அளித்துள்ளது. அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவா்களுடன் இந்திய தூதரகம் தொடா்பில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலை நடத்தியது யாா், எப்படித் தாக்குதல் நடத்தப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை. இந்தத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.