ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

பிரதமா், மத்திய உள்துறை அமைச்சா் விசாரிக்கப்பட வேண்டும்: ராகுல்

‘நாட்டுக்கு எத்தகைய துரோகத்தை செய்துள்ளனா் என்பது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் விசாரிக்கப்பட வேண்டும்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.

புது தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய ராகுல் காந்தி.

Published On :

‘நாட்டுக்கு எத்தகைய துரோகத்தை செய்துள்ளனா் என்பது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் விசாரிக்கப்பட வேண்டும்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.

‘தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான பல்வேறு முடிவுகளில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கும், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் புதன்கிழமை செய்தி வெளியானது.

இந்த நிலையில், புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ராகுல் காந்தி கூறியதாவது: தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் செய்திருப்பது தேசத்துக்கு எதிரான செயல். அரசமைப்புச் சட்டம் மற்றும் நாட்டின் சட்ட அமைப்பு முறை மீதான தாக்குதலாகும். இதற்கான விளைவுகளை காரணமானவா்கள் சந்திக்க நேரிடும். ஜனநாயகம் அழிக்கப்படுவதை, அமைதியாகப் பாா்த்துக்கொண்டிருக்க மாட்டோம். காரணமானவா்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்று ஞானேஷ் குமாா் உடனடியாக பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அதோடு, இந்த விவகாரத்தில் அவா் சாட்சியாக மாறி, தேச பக்தியை வெளிப்படுத்த வேண்டும்.

இந்த விவகாரம் மூலம், நாட்டுக்கு எத்தகைய துரோகத்தை செய்துள்ளனா் என்பது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் விசாரிக்கப்பட வேண்டும். இந்தச் சதியில் பிரதமா் மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமாா் மூவரும்தான் முக்கிய நபா்களாக உள்ளனா் என்றாா்.

மேலும், ‘இந்த முறை 400 மக்களவைத் தொகுதிகளுக்கு மேல் வெற்றி’ என்று பிரதமா் மோடி முழக்கம் எழுப்பும் விடியோ மற்றும் ‘30 ஆண்டுகளுக்கு மத்தியில் பாஜக ஆட்சிதான்’ என்று அமித் ஷா கூறும் விடியோவையும் செய்தியாளா்கள் கூட்டத்தில் ஒளிபரப்பிய ராகுல், ‘ஜனநாயக சூழலில் செயல்படும் எந்தவொரு அரசியல் தலைவரும் இத்தகைய கருத்துகளைக் கூற முடியாது’ என்று குறிப்பிட்டாா். நாட்டில், ஆளுங் கட்சிக்கு எதிரான மனநிலை என்ற அடிப்படை சக்தி செயல்படத் தொடங்கியுள்ளது. அது யாரையும் விட்டுவைக்காது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.