போல் வால்ட் தமிழக வீராங்கனைக்கு வெண்கலம்!ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்புஞானேஷ் குமார் உருவ பொம்மை எரிப்பு! ஆசிய விளையாட்டில் குண்டு எறிதலில் வெண்கலம்!

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிர்ப்பு: மாணவர் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் மீரட் மற்றும் வாரணாசி பயணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

ஞானேஷ் குமார்.

Published On :

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் மீரட் மற்றும் வாரணாசி பயணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பான பல்வேறு முடிவுகளில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் புதன்கிழமை செய்தி வெளியானது.

வாக்காளர்கள் பெயர் மொத்தமாக நீக்கம், படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், வாக்காளர் தரவு தளங்களை மையப்படுத்துதல் மீதான கட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்களில் தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பை பதிவு செய்ததாகவும், தங்களுக்கு தெரியாமல் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் ஆட்சேபனை செய்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், எதிர்க்கட்சிகளும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், வருகிற அக். 2 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் மீரட் மற்றும் வாரணாசியில் நடைபெறவிருந்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தின் இரு நகரங்களிலுமுள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பூடான் செல்லவிருப்பதால், நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், எஸ்.ஐ.ஆருக்கு இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் லடாக் ஆகிய இடங்களுக்கான பயணங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER