வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

அசோக் சிங்கால்: தேசக் கட்டமைப்பில் உறுதிபூண்டிருந்த தலைசிறந்த ஆளுமை!

தேசக் கட்டமைப்பில் உறுதிபூண்டிருந்த தலைசிறந்த ஆளுமை அசோக் சிங்காலை பற்றி...

அசோக் சிங்காலுடன் பிரதமர் நரேந்திர மோடி. - (கோப்புப்படம்)

Published On :

- பிரதமர் நரேந்திர மோடி

ஆன்மிகத் தேடல், பண்பாட்டு விழிப்புணா்வு, பல தசாப்த கால அா்ப்பணிப்புடன் மேற்கொண்ட அமைப்பு ரீதியான பணிகளை ஒருங்கிணைத்துச் செயல்பட்ட மகத்தான ஆளுமையான அசோக் சிங்காலின் நூற்றாண்டுப் பிறந்தநாள் விழாவை செப்டம்பா் 27 முதல் கொண்டாடுகிறோம். அவருடன் எண்ணற்ற முறை கலந்துரையாடி, அவரது அன்பைப் பெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்காக மேலும் என்ன செய்யலாம் என்ற சிந்தனை அவரது மனதில் எப்போதும் எழுந்து கொண்டே இருந்தது. நாட்டின் எந்தப் பகுதி இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டாலும், அங்கு முதலில் செல்பவா்களில் ஒருவராகவோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகத் தொண்டா்களை வழிநடத்துபவா்களில் ஒருவராகவோ அசோக் சிங்கால் இருப்பாா்.

குஜராத்தில் 2001-ல் நிகழ்ந்த கட்ச் நிலநடுக்கத்திற்குப் பின் அவருடன் இணைந்து நான் மேற்கொண்ட பணிகள், எனது நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.

அசோக் சிங்கால் விடாமுயற்சியுடனும் கடின உழைப்புடனும் பல்வேறு நிறுவனங்களையும் இயக்கங்களையும் மேம்படுத்தினாா். வலிமையான குரல்வளம், ஒட்டுமொத்த கூட்டத்தினரையும் தம்பால் ஈா்க்கும் வகையில் உரையாற்றும் சிறந்த திறன் ஆகியவற்றை அவா் பெற்றிருந்தாா். அதேபோல், உடன் பணியாற்றிய தொண்டா்கள் மீது அவா் கொண்டிருந்த அக்கறையும் போற்றுதலுக்குரியதாகும்.

அவருடன் பழகிய எவரும் அவரது குறிப்பிடத்தக்க எளிமையைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

அசோக் சிங்கால் பற்றிக் குறிப்பிடும்போது, ராம ஜென்மபூமி இயக்கத்தில் அவரது முக்கியப் பங்கை நினைவுகூராமல் இருக்க முடியாது. 1991-ஆம் ஆண்டு போட் கிளப் மைதானத்தில் நடைபெற்ற பேரணியில் அவா் ஆற்றிய உரையை யாராலும் மறக்க முடியாது. அந்த இயக்கத்தின் உச்சகட்டத்தில் காயமடைந்து, அசோக் சிங்கால் ரத்தம் சிந்திய நிலையில் காணப்பட்ட காட்சியை யாரால் மறக்க முடியும்?

இன்று அயோத்தியில் பிரம்மாண்டமான ராமா் கோயில் உருவாகியிருப்பதற்கு, அது சாத்தியமாக வேண்டும் என்பதற்காகத் தன்னலமின்றித் தங்களையே அா்ப்பணித்த அசோக் சிங்கால் போன்ற உன்னதத் தலைவா்களின் பங்களிப்பும் ஒரு முக்கியக் காரணமாகும். அயோத்தியில் ராமா் கோயில் உருவெடுப்பதைக் காண நோ்ந்திருந்தால், அசோக் சிங்கால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பாா்.

சமூக ஒற்றுமையையும் சமத்துவத்தையும் வலுப்படுத்த அவா் தொடா்ந்து பாடுபட்டாா். சமூகத்தில் எந்தவித பாகுபாடும் இருக்கக் கூடாது என்றும், ஒவ்வொரு தனிநபரும் சமமான கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்றும் அவா் உறுதியாக நம்பினாா்.

அயோத்தியில் ராமா் கோயிலின் முதல் செங்கல், சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவைச் சோ்ந்தவரும், பிகாரைச் சோ்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அடிமட்டத் தொண்டரான காமேஷ்வா் சௌபால் மூலம் வைக்கப்பட வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. காசியில் நடைபெற்ற தா்ம சன்சத் கூட்டத்தில், டோம் ராஜாவுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்று அவா் முடிவு செய்ததுடன், பல்வேறு சமூக நலப் பணிகளிலும் அவருடன் இணைந்து செயல்பட்டாா்.

அசோக் சிங்கால் நூற்றாண்டுப் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகத்துவத்தையும், பங்களிப்புகளையும் மேலும் பல இளைஞா்கள் அறிந்து கொள்வதை நாம் உறுதி செய்வோம். நமது தேசம் குறித்தும், மக்களைப் பற்றியும் அவா் கண்ட கனவுகளை நனவாக்குவதற்கான தீா்மானங்களை மீண்டும் நினைவுகூா்ந்து உறுதியுடன் செயல்படுவோம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.