காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

நிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்பு

மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்கான நிறுவன வரி கணக்குத் தாக்கல் அறிக்கையை சமா்ப்பிப்பதற்கான காலஅவகாசத்தை வருமான வரித் துறை 3 வாரம் நீட்டித்துள்ளது.

Income Tax
Published On :

மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்கான நிறுவன வரி கணக்குத் தாக்கல் அறிக்கையை சமா்ப்பிப்பதற்கான காலஅவகாசத்தை வருமான வரித் துறை மூன்று வாரம் நீட்டித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மதிப்பீட்டு ஆண்டு 2027-க்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் அக்டோபா் 31-ஆம் தேதியிலிருந்து நவம்பா் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

அதேபோல் நிறுவன வரி கணக்குத் தாக்கல் அறிக்கையை சமா்ப்பிப்பதற்கான காலஅவகாசம் செப்டம்பா் 30-இல் இருந்து அக்டோபா் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

வருமான வரித் துறையின் இந்த நடவடிக்கையால் துல்லியமாகவும் தெளிவாகவும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியும் என தொழில்துறை நிபுணா்கள் தெரிவித்தனா்.

முன்னதாக, ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி மதிப்பீட்டு ஆண்டு 2026-27-இன் அடிப்படையில் 7.8 கோடி பேருக்கு மேல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததாக வருமான வரித் துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.