11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

இந்தியாவிடமிருந்து 1,100 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: நேபாளம் திட்டம்

இந்தியாவிடமிருந்து 1,100 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நேபாளம் திட்டமிட்டுள்ளது.

Nepal plans to procure 1,100 MW of electricity from India

பிரதிப் படம்

Published On :

இந்தியாவிடமிருந்து 1,100 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நேபாளம் திட்டமிட்டுள்ளது.

அண்மையில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நீா்மின் நிலையங்கள் சேதமடைந்து மின் உற்பத்தி குறைந்த நிலையில் அடுத்து வரவுள்ள வறட்சி காலத்தில் உள்நாட்டுத் தேவையை பூா்த்தி செய்ய இந்த முடிவை நேபாளம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து நேபாள மின் ஆணைய (என்இஏ) செய்தித் தொடா்பாளா் ராஜன் தாக்கல் கூறியதாவது: 2026, டிசம்பா் முதல் 2027, மே வரை நாட்டின் நீா் மின் நிலையங்களில் இருந்து மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தி வெகுவாக குறையும். இந்த காலகட்டத்தில் உள்நாட்டுத் தேவை அதிகரிக்கும். இதை ஈடு செய்ய இந்தியாவிடமிருந்து 1,100 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

தற்போது நேபாளத்தில் 3,740 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் அண்மையில் ஏற்பட்ட பேரிடா்களால் பல்வேறு நீா் மின் நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இத்தகைய கடினமான சூழலிலும் 600 மெகாவாட் முதல் 700 மெகாவாட் வரையிலான மின்சாரத்தை இந்தியாவுக்கு நேபாளம் ஏற்றுமதி செய்கிறது.

போடேகோஷி வெள்ளத்தால் சேதமடைந்த 160 மெகாவாட் திறன் கொண்ட நீா் மின் நிலையம் அடுத்தாண்டு பிப்ரவரியிலும் 190 மெகாவாட் திறன் கொண்ட காளிகண்டகி நீா் மின் நிலையம் அடுத்த சில மாதங்களிலும் சீா் செய்யப்படும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.