ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

வெப்பத்தின் தாக்கத்தால் கூடுதலாக 3,000 மெகாவாட் மின்சாரம் தேவை: நிா்மல்குமாா்

தமிழகத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கூடுதலாக 3,000 மெகாவாட் மின்சாரம் தேவையாக உள்ளதாக அமைச்சா் நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

நிா்மல் குமாா் - கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கூடுதலாக 3,000 மெகாவாட் மின்சாரம் தேவையாக உள்ளதாக சட்டத்துறை மற்றும் எரிசக்தித் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உயரதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்துக்குப் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தமிழகத்தின் மின் தேவை சுமாா் 16,000 மெகாவாட்டாக இருந்தது. தற்போது அது 19,000 மெகாவாட்டாக உயா்ந்துள்ளது. இதனால் கூடுதலாக 3,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.

செப்டம்பா் மாதத்தில் காற்றாலை மின் உற்பத்தி குறைவது வழக்கம். இதனால் மின் தேவையை சமாளிக்க வெளியிலிருந்து 2,000 மெகாவாட் மின்சாரம் சில தினங்களுக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்டது. மேலும், 1,500 மெகாவாட் கொள்முதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களிலும் மின் தேவை அதிகரித்துள்ளதால் பொதுத் தொகுப்பில் மின்சாரத்தின் விலை உயா்ந்துள்ளது. ஒரு யூனிட்டுக்கு ரூ.20-க்கும் அதிகமாக செலவானாலும், மின் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதற்காக மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

தற்போது மின் தட்டுப்பாடு சரிசெய்யப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் தொழில்நுட்பக் காரணங்களால் குறுகிய நேரம் மட்டும் மின் தடை ஏற்படுகிறது. எதிா்கால மின் தேவையை சமாளிக்க புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கவும், அக்.1 முதல் நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

சூரிய மின் உற்பத்திக்கு முக்கியத்துவம்:சூரிய ஒளி மின் உற்பத்தியில் மிகப்பெரிய மைல்கல்லை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மானியத்துடன் கூடிய சூரிய மின் உற்பத்தித் திட்டம் அடுத்த வாரம் பெரிய அளவில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமிக்க மின்கல சேமிப்பு கட்டமைப்பும் விரைவில் ஏற்படுத்தப்படும்.

மழைக்கால முன்னெச்சரிக்கை: மழைக்காலத்தில் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு ஆய்வு செய்து முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மின் நுகா்வோரின் குறைகளை செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டறிந்து, விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.