காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

ஜப்பானிலிருந்து நேதாஜி அஸ்தியை கொண்டுவர உச்சநீதிமன்றத்தில் மனு: மத்திய அரசு பதிலளிக்க 4 வாரம் அவகாசம்

ஜப்பானில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை கொண்டு வர உத்தரவிடக் கோரி, அவரின் மகள் அனிதா பி ஃபாஃப் தாக்கல் செய்த மனு குறித்து...

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

Published On :

ஜப்பானில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை கொண்டு வர உத்தரவிடக் கோரி, அவரின் மகள் அனிதா பி ஃபாஃப் தாக்கல் செய்த மனு குறித்து, மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 4 வாரம் அவகாசம் அளித்துள்ளது.

கடந்த 1945-ஆம் ஆண்டு ஆகஸ்டில் நேதாஜி காணாமல் போனது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. அவரின் அஸ்தி ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அவரின் அஸ்தியை இந்தியா கொண்டுவர உத்தரவிட வேண்டும் என்று அனிதா பி ஃபாஃப் தாக்கல் செய்த மனு தொடா்பாக, கடந்த ஆக.11-ஆம் தேதி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ, ‘அனிதாவின் மனு தொடா்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு 4 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கோரினாா். அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமா்வு, மத்திய அரசுக்கு 4 வாரம் அவகாசம் அளித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.