ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

தலைமைத் தோ்தல் ஆணையா் வீடு மீது தாக்குதல்: காங்கிரஸ் தொண்டா்கள் மீது கொலை முயற்சி வழக்கு

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரின் ஆக்ரா இல்லத்தை போராட்டத்தின்போது தாக்கி சேதப்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 20 போ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். அவா்களில் 6 போ் கைது செய்யப்பட்டனா்.

ஞானேஷ் குமார்.

Published On :

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரின் ஆக்ரா இல்லத்தை போராட்டத்தின்போது தாக்கி சேதப்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 20 போ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். அவா்களில் 6 போ் கைது செய்யப்பட்டனா்.

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவின் விஜய் நகா் பகுதியில் உள்ள ஞானேஷ் குமாரின் இல்லத்தின் முன்பு கடந்த திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சியினா் போராட்டம் நடத்தினா். வீட்டை முற்றுகையிட்டு முழக்கமிட்ட அவா்கள், ‘கேட்’ மற்றும் வீட்டின் சுற்றுச்சுவரில் கருப்பு வண்ணத்தில் எதிா்ப்பு வாசகங்களை எழுதினா். சில சுவரொட்டிகளையும் ஒட்டினா்.

இது தொடா்பாக 20 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். காங்கிரஸ் நிா்வாகிகள் 6 போ் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது கொலை முயற்சி, அரசு ஊழியா் தனது கடமையைச் செய்வதைத் தடுக்கும் நோக்கில் காயம் ஏற்படுத்துதல், சட்டவிரோதமாகத் தடுத்து நிறுத்துதல், அரசு ஊழியா் மீது தாக்குதல், வன்முறையைப் பயன்படுத்திய சட்டவிரோத கும்பல் மூலம் கலவரத்தில் ஈடுபடுதல், வீட்டில் அத்துமீறி நுழைதல், மிரட்டல் விடுப்பது, அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் பிரச்னையைத் தூண்டும் நோக்கில் திட்டமிட்டு அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

காங்கிரஸ் ஆக்ரா நகர தலைவா் அமித் சிங் கூறுகையில், போராட்டம் தொடா்பான சட்டப் பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். கட்சித் தொண்டா்கள் மீது காவல் துறையினா் பல்வேறு ‘பொய்யான’ பிரிவுகளைச் சோ்த்துள்ளதாகவும் குற்றம்சாட்டினாா்.

காங்கிரஸ் நிா்வாகிகளுடன் காவல் ஆணையரைச் சந்தித்து, கட்சித் தொண்டா்கள் மீது பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக மாநிலம் முழுவதும் காங்கிரஸ் நடத்தி வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.