ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

வளர்ச்சி, பாரம்பரியம்: சுற்றுலாத்துறை முன்னேற்றம்: கஜேந்திர சிங் ஷெகாவத்

சுற்றுலாத்துறை முன்னேற்றம் பற்றி மத்திய கலாசாரம், சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ....

Published On :

மலைகள், கோயில்கள், கடற்கரைகள் போன்றவை மட்டும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்குப் போதுமானதாக இருக்க முடியாது. சிறந்த சாலை வசதிகள், விமானங்கள் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள், தங்குமிடங்கள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக உள்ளது. இவை தவிர சுற்றுலாப் பயணிகள் தங்களது வாழ்நாளில் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் வகையில் உள்ள பயண அனுபவமும் அவசியமாகும்.

உலக அளவில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி சார்ந்த குறியீடுகள், இத்தகைய பல்வேறு அம்சங்களைக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. இதன்படி, 2026-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்றுலாத்துறைக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா 31-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டின் இந்தப் பட்டியலில் 65-ஆவது இடத்தில் இருந்த இந்தியா 2024-ஆம் ஆண்டில் 39-ஆம் இடத்திற்கு முன்னேறியது.

தற்போது, மொத்தம் உள்ள 160 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 31-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது, கடந்த 2024-ஆம் ஆண்டைக் காட்டிலும் 4.3 சதவீத வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

மேலும் தெற்காசியா, நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி, பாரம்பரியம் என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ள சுற்றுலா சார்ந்த கொள்கைகளுக்கு உலக அளவில் கிடைத்துள்ள அங்கீகாரமாகும்.

பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு சுற்றுலாத் துறையின் தரவரிசை மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த மதிப்பீடுகளின் 13 குறியீடுகளில் இந்தியா உலகின் முதல் 10 நாடுகளில் ஒன்றாக உள்ளது.

நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்ட புதிய நெடுஞ்சாலைகள், ரயில் போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள், புதிய விமான நிலையங்கள், மண்டல அளவிலான விமான சேவைகள் போன்ற நடவடிக்கைகள் சுற்றுலாத் துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளன. உடான் திட்டத்தின் கீழ், 687 வழித்தடங்கள் மூலம் 95 விமான நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் பன்முகத்தன்மை அதன் மிகப்பெரிய வலிமையாக அமைந்துள்ளது. சுற்றுலாத் தலங்களை உருவாக்குவதுடன், அவற்றின் மேம்பாட்டிலும் மத்திய சுற்றுலா அமைச்சகம் கவனம் செலுத்தி வருகிறது.

சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ், 15 கருப்பொருள்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ரூ.5,295 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான 76 சுற்றுலாத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் 75 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. 2-ஆவது கட்டமாக இத்திட்டத்தின் கீழ் ரூ.2,207 கோடிக்கும் அதிக மதிப்பிலான 53 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரசாத் திட்டத்தின் கீழ், புனித யாத்திரை தலங்களில் தூய்மை, பாதுகாப்பு, பயணிகளுக்கான வசதிகள், வேலைவாய்ப்பு ஆகியவை மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் தற்போது 172 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு மின்னணு முறையில் விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதில் 92 சதவீத மின்னணு விசாக்களுக்கான விண்ணப்பங்களுக்கு 72 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்கப்படுகின்றன.

வியத்தகு இந்தியா டிஜிட்டல் தளம், நிதி பிளஸ், பன்மொழி சுற்றுலா உதவி எண் ஆகியவை சுற்றுலா சார்ந்த தகவல், சேவைகளை எளிதாக்கியுள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்குவதுடன், சிறு விடுதிகள், வழிகாட்டிகள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சேவை வழங்குநர்கள் என பல்வேறு தரப்பினரை பெரிய அளவிலான சந்தைகளுடன் இணைப்பதற்குத் தொழில்நுட்பம் முக்கிய உந்துசக்தியாக அமைந்துள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறை 5.22 சதவிகித பங்களிப்பை வழங்குகிறது. 2023-24-ஆம் ஆண்டில் இத்துறையில் 8.46 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் நாட்டிற்கு கிடைக்கும் அந்நியச் செலாவணி வருவாய் ரூ.2,76,831 கோடியாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவின் செழுமையான நாகரிகத்தை உலகத்துடன் இணைப்பதிலும், அனைத்து பிராந்தியங்களிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் சுற்றுலாத்துறை ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.