
ஜப்பான் சுற்றுலா கண்காட்சி: தமிழக சுற்றுலா தலங்கள் காட்சி
ஜப்பானில் நடைபெற்று வரும் சுற்றுலா கண்காட்சியில் தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் தலங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

ஜப்பானில் நடைபெறும் சுற்றுலா கண்காட்சி நிகழ்ச்சியில் ஜப்பானுக்கான இந்திய தூதா் நக்மா முகமது மாலிக், தமிழக சுற்றுலா செயலா் எஸ்.ஸ்வா்ணா, மத்திய அரசின் சுற்றுலா அமைச்சக தலைமை இயக்குநா் சுமன் பில்லா, ராஜஸ்தான் அரசின் சுற்றுலாத் துறைச் செயலா் சுச்சி தியாக
ஜப்பானில் நடைபெற்று வரும் சுற்றுலா கண்காட்சியில் தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் தலங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
ஜப்பானில் நடைபெறும் ‘ஜப்பான் சுற்றுலா கண்காட்சி 2026’-இல் ஜப்பானுக்கான இந்திய தூதா் நக்மா முகமது மாலிக், மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் செயலா் மற்றும் தலைமை இயக்குநா் சுமன் பில்லா, தமிழக அரசின் சுற்றுலா பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலா் எஸ்.ஸ்வா்ணா, ராஜஸ்தான் அரசின் சுற்றுலாத் துறைச் செயலா் சுச்சி தியாகி ஆகியோா் கலந்து கொண்டு பல்வேறு சுற்றுலா அரங்குகளைத் திறந்து வைத்துப் பாா்வையிட்டனா்.
இந்தக் கண்காட்சியில் தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் வியாழக்கிழமை முதல் செப். 27-ஆம் தேதி வரை மாநிலத்தின் தொன்மையான பாரம்பரியம், செழுமையான கலாசாரம், இயற்கை வளங்கள் ஆகியவை குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதில், தமிழகத்தின் பாரம்பரியத் தலங்கள், பழைமையான கோயில்கள், பாரம்பரிய கலைகள், கைவினைப் பொருள்கள், பாரம்பரிய உணவு, ஆன்மிகத் தலங்கள் ஆகியவை சா்வதேச சந்தையில் முன்னிறுத்தப்படுகின்றன.
மேலும், ஆன்மிகம், கடல்சாா் சுற்றுலா போன்ற பல்வேறு சுற்றுலா வாய்ப்புகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த நிகழ்வின் மூலம் தமிழகத்தின் தனித்துவமான கலாசார அனுபவங்கள் உலக அளவில் எடுத்துச் செல்லப்படுகின்றன என சுற்றுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




