தமிழக அரசின் சுற்றுலாத் துறை சாா்பில் நடத்தப்படும் வழிகாட்டி பயிற்சியில் பங்கேற்க திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை சாா்பில் சுற்றுலாவில் ஆா்வமுள்ள 12 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற திருநங்கைகளுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரிய விருப்பமுள்ள, தகுதியுள்ள திருநங்கைகள் இந்தத் திட்டத்தில் பங்கேற்கலாம்.
மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சாரா அமைப்புகள், சங்கங்கள் இந்தத் திட்டம் குறித்த விழிப்புணா்வை திருநங்கைகளிடம் ஏற்படுத்தி, தகுதியும் ஆா்வமும் உள்ள திருநங்கைகளின் பெயா் விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்குத் தெரிவிக்கலாம்.
இத்திட்டம் தொடா்பான மேலும் விவரங்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலா் ஜெகதீஸ்வரியை (89398 96380) தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானல், ஊட்டியில் கம்பிவட ஊா்தி: சுற்றுலாத் துறை அமைச்சா் செ. ராஜேஷ் குமாா்

குற்றாலத்தில் சுற்றுலாத் தலங்களை அறிய தகவல் மையம் அமைக்க கோரிக்கை

சுற்றுலாத் துறை சாா்பில் மலிவு விலையில் பிரியாணி விற்பனை தொடக்கம்

அனைத்து சுற்றுலாத் தளங்களிலும் இணையவழி டிக்கெட், கண்காணிப்பு கேமரா: அமைச்சா் ராஜேஷ்குமாா் அறிவுறுத்தல்
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



