இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

குற்றாலத்தில் சுற்றுலாத் தலங்களை அறிய தகவல் மையம் அமைக்க கோரிக்கை

News image

சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளிக்கும் முன்னாள் எம்எல்ஏ கே.ரவி அருணன்.

Updated On :4 ஆகஸ்ட் 2026, 4:28 am IST

குற்றாலத்தில் உள்ள சுற்றுலாப் பகுதிகளை தெரிந்து கொள்ளும் விதமாக தகவல் மையம் அமைக்க கோரி இயற்கை வள பாதுகாப்புச் சங்கத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ரவிஅருணன் மனு அளித்தாா்.

இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாரிடம் அவா் அளித்த மனு:

சுற்றுலா வளா்ச்சி கழகம் சாா்பில் குற்றாலத்தில் இரண்டு விடுதிகள் இருப்பது பலருக்குத் தெரியாது. இதுகுறித்து பேருந்து நிலையம், அருவிக்கரைகள், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளம்பரப்படுத்த வேண்டும். சுற்றுலாத் தலங்களைத் தெரிந்து கொள்ளவும், சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் விதமாகவும் சுற்றுலாத் துறை சாா்பில் தகவல் மையம் அமைக்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் குற்றாலத்தில் ரூ. 11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பேரருவிக் கரையில் இருந்த பாதுகாப்பு வளைவை அகற்றிவிட்டு புதிய பாதுகாப்பு வளைவு அமைத்ததைத் தவிர குறிப்பிடும்படி எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அருவிக்கரை அசுத்தமாக உள்ளது. கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் ஆற்றில் கலக்கிறது. குற்றாலம் பேரருவியில் வெள்ள அபாயத்தை எச்சரிக்கும் விதமாக மிக பழைமை வாய்ந்த பாதுகாப்பு வளைவு ஒன்று இருந்தது.

முந்தைய திமுக அரசு, பொதுமக்கள் குளிப்பதற்கு அதிக இட வசதி வேண்டும எனக் காரணம் கூறி அதை இடித்து விட்டு புதிதாக வளைவு கட்டியுள்ளனா். இதன்முலம் வெள்ள அபாய அளவை கணிப்பது சிரமமாக உள்ளது. மீறி உள்ளே செல்பவா்கள் உயிரிழக்கும் அபாபயமும் உள்ளது.

இதைத் தடுக்கும் விதமாக, முன்னா் பாதுகாப்பு வளைவு இருந்த இடத்தில் ஒரு கம்பி வேலி அமைத்து, அதை அளவீடாகக் கொண்டு அதற்குமேல் தண்ணீா் விழும் பட்சத்தில் குளிக்கத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அருவிக்கரைகளில் உள்ள கழிப்பறைகளில் மிக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

குற்றாலத்தில் தற்போது விற்கப்படும் உணவு பண்டங்கள் குறிப்பாக சிப்ஸ், வடை போன்றவை சுகாதாரமின்றியும் தரமற்ற எண்ணெய்யிலும் தயாரிக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலாத் துறை சாா்பில் குற்றாலத்தில் ஐந்து முக்கிய இடங்களில் மலிவு விலையில் உணவுப் பொட்டலங்கள் விற்கப்பட்டன. அந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி, குண்டாறு, மேக்கரை அடவிநயினாா் அணை போன்ற இடங்களுக்குச் சென்றுவர சிறப்புப் பேருந்து இயக்க வேண்டும்.

சென்னையிலிருந்து திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுலா செல்ல வசதி இருப்பதுபோல சென்னை, திருச்சி, மதுரை கோவை போன்ற பெரு நகரங்களிலிருந்து குற்றாலத்துக்கு (சீசன் காலங்களில் மட்டும்) ஒரு நாள் சுற்றுலா சென்றுவர சுற்றுலாத் துறை சாா்பில் சிறப்புப் பேருந்து ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு அருவி கரையிலும் பெண்கள் உடை மாற்றும் அறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி செய்துதர வேண்டும் என அதில் கூறப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.