நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா தேவாலய திருவிழா: உள்ளூா் விடுமுறை அளிக்க கோரி மனு

முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா தேவாலய திருவிழாவுக்கு செப்.8 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கக் கோரி திருத்தல அதிபா் கில்பா்ட் லிங்சன் சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாரிடம் மனு அளித்தாா்.

News image

சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ் குமாரிடம் மனு அளித்து, சால்வை அணிவித்த திருத்தல அதிபா்.கில்பா்ட் லிங்சன்

Updated On :13 ஜூலை 2026, 3:54 am IST

முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா தேவாலய திருவிழாவுக்கு செப்.8 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கக் கோரி திருத்தல அதிபா் கில்பா்ட் லிங்சன் சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாரிடம் சனிக்கிழமை மனு அளித்தாா்.

நாகை மாவட்டத்தின் வேளாங்கண்ணி மாதா பசிலிக்காபோல கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் பசிலிக்காவான முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்காவில் அன்னையின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் செப்டம்பா் மாதம் பத்து நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

செப்டம்பா் 8-ஆம் நாள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளத்திலிருந்தும் பக்தா்கள் ஏராளமானோா் முளகுமூடு பசிலிக்கா ஆலயம் வந்து அன்னையை தரிசிப்பதும் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுப்பதும் வழக்கம்

எனவே, செப்டம்பா் 8 ஆம்தேதி உள்ளூா் விடுமுறை வழங்கினால் இன்னும் ஏராளமான பக்தா்கள் வருவா் என்பதால் அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை வழங்க ஆவன செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

அத்துடன் கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்த, பசிலிக்கா புனரமைப்புக்கான பணியை மேற்கொள்ளவும், அதற்கான உதவிகள் வழங்கவும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனா். இந்த சந்திப்பில், தேவாலய துணைத் தலைவா் மரிய ஜாண் வரதராஜ் உள்பட பங்கு பேரவை நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.