16. நரம்பு அழுத்தம் என்றால் என்ன?

Nerve Entrapment என்பது நரம்பு மீதான ஏற்படும் அழுத்தம் ஆகும்.
16. நரம்பு அழுத்தம் என்றால் என்ன?

Nerve Entrapment (நரம்பு அழுத்தம்)

Nerve Entrapment என்பது நரம்பு மீது ஏற்படும் அழுத்தம் ஆகும். அதாவது, நான் கடந்த வாரங்களில் கூறியதைப் போல ஒவ்வொரு முதுகெலும்பின் பக்கவாட்டில் இருந்தும் இரண்டு நரம்புகள் வெளிவருகின்றன. இந்த நரம்புகள், உடலில் உள்ள வெவ்வேறு பகுதிகளுக்கு தேவையான ரத்தம், இயக்கம் (Movement) போன்றவை சென்றடைய காரணமாயிருக்கிறது. இந்த நரம்புகள் மீதான அழுத்தம் அதிகரிக்கும் போது இவ்வகையான Nerve Entrapment ஏற்படுகிறது. இது முதுகில் மட்டுமில்லாமல் உடலின் எந்த பகுதியிலும் ஏற்படலாம். நரம்பு அழுத்தம் ஏற்படுவதால் உங்கள் தசைகள் வலுவிழந்து நீங்கள் உங்கள் இயக்கத்தை (Movement) இழக்க நேரிடும்.

உதாரணமாக, இவ்வகையான நரம்பு அழுத்தங்கள் உங்கள் கை அல்லது கால்களை செயலிழக்க செய்யும். சில நேரங்களில் உங்கள் Stiffness கால் அல்லது கைகளை உங்களால் தூக்க முடியாமல் போகும். இது நரம்பு அழுத்தம் (Nerve Entrapment) ஏற்படுவதால். இவ்வகையான நரம்பு அழுத்தங்கள் சில சமயங்களில் தானாக சரிவதுண்டு. ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகள் அதிகம் தொந்தரவு தரக் கூடியது. நரம்பு அழுத்தம் ஏற்படுத்தும் விளைவுகளை (Consequnces) குணப்படுத்துதல் மிகவும் அவசியம். இப்போது நரம்பு அழுத்தம் ஏற்பட என்ன காரணங்கள் என்பதைப் பார்ப்போம்.

நரம்பு அழுத்தம் ஏற்பட மூன்று மிக முக்கிய காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

Disc Bulge
தசைகள் கடினமாதல் (Muscular Stiffness)
Imbalance (ஏற்றத்தாழ்வு)

Disc Bulge:

கடந்த வாரங்களில் கூறியதை போல, இரண்டு முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள Disc-ன் மீது ஏற்படும் அழுத்தத்தினால் அது தன்னுடைய இடத்திலிருந்து வெளியே வந்து பக்கவாட்டில் உள்ள நரம்புகளை அழுத்துவதால் நரம்பு அழுத்தம் ஏற்படுகின்றது.

தசை கடினமாதல் (Muscular Stiffness):

நரம்பு அழுத்தம் எனப்படும் Nerve Entrapment ஏற்படுவதற்கு இது ஒரு முக்கியமான காரணம். ஏனெனில், இது ஏற்படுவது நமக்கே தெரியாது. இது ஒரே நாளில் ஏற்படுவது அல்ல. இவ்வகையான தசை கடினமாதல், சிறிது சிறிதாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்து ஏற்படுவதால் தசைகளில் கடினம் (Stiffness) ஏற்படுகிறது. இந்த தசைக் கடினம் ஏற்பட, ஏற்பட தசைகளுக்கு கீழே உள்ள நரம்புகளை அழுத்தி நரம்பு அழுத்தம் ஏற்படக் காரணமாயிருக்கிறது. அதேபோல், இவ்வகையான தசை கடினம் (Muscular Stiffness) உடலின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்படுவதால் அந்தப் பகுதியில் உள்ள நரம்புகளில் அழுத்தம் ஏற்படுகின்றது. உதாரணமாக, Sciatica என்பதைக் கேள்விபட்டிருப்பீர்கள். Sciatic எனப்படும் நரம்பு நம் கீழ் முதுகில் ஆரம்பித்து கணுக்கள் வரை செல்கிறது, அது மட்டுமில்லாமல் இப்பகுதிகளை தேவையான ரத்தம், இயக்கம் போன்றவற்றை எடுத்துச் செல்கிறது. இந்த பகுதியில் உள்ள தசைகள் கடினமடைவதால் Sciatia ஏற்படுகின்றது. இதனால் கால்களில் வலுவிழப்பு, மறத்துப் போதல். ஊசி குத்துதல் போன்ற வலி, போன்றவை ஏற்படும். Disc Bulge-ஐ விட தசை கடினம்தான் நரம்பு அழுத்தம்; ஏற்பட முக்கியக் கரணம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஏற்றத்தாழ்வு (Imbalance)

நீங்கள் உட்காரும் போதோ, நிற்கும் போதோ ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் (Imbalance) அதிகரிப்பதால் நரம்பு அழுத்தம் ஏற்பட அது கூட காரணமாகிவிடும். உதாரணமாக, உங்கள் Wallet Purse-ஐ (பணப்பை) நீங்கள் உங்கள் பின் பாக்கெட்டில் வைத்து நீண்ட நேரம் உட்காருவதால் Sciatic நரம்பின் மீதான அழுத்தம் ஏற்படுகின்றது. இவ்வகையான ஏற்றத்தாழ்வுகள் (Imbalance) நரம்பு அழுத்தங்கள் ஏற்பட 40% காரணமாயிருக்கின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே இவ்வகையான ஏற்றத்தாழ்வுகளை (Imbalance) தவிர்க்க வேண்டும்.

சிகிச்சை முறைகள்:

  • மேம்படுத்தப்பட்ட பிசியோதெரபி சிகிச்சை முறைகள் (Advanced Physiotherapy Treatment)
  • அறுவை சிகிச்சை முறை (Surgical Treatment)
  • Nerve Block Injection

மேம்படுத்தப்பட்ட பிசியோதெரபி சிகிச்சை முறைகள் (Advanced Physiotherapy Treatment):

Nerve Entrapment குணமடைய மேம்பட்ட பிசியோதெரபி சிகிச்சைகள் மிகவும் முக்கியமானவை. நான் கடந்த வாரத்துல கூறியதை போல Manual Therapy, Trigger point release, Exercise மற்றும் வலுப்பயிற்சிகள் செய்வதன் மூலம் இதைக் குணப்படுத்த முடியும். இதில் முக்கியமாக கை மற்றும் கால்கள் வலுவிழந்தாலோ, மறத்துப் போதல் ஏற்பட்டாலோ தேவையான உடற்பயிற்சிகளை செய்து இழந்த வலுவை (Strength) மீட்டெடுக்க வேண்டும்.

அப்போது மட்டுமே இறுக்கப்பட்ட (Blocked / Compressed) நரம்புகளால் ஏற்படும் உபாதைகளை தவிர்க்க முடியும். இதே போல் மேம்படுத்தப்பட்ட பிசியோதெரபி சிகிச்சைகளில் ஒன்றான Dry Needling சிகிச்சை முறை Nerve Entrapment-ஆல் ஏற்படும் வலிகளை குணப்படுத்த மிகவும் உதவுகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. இப்போது Dry Needling சிகிச்சை என்ன என்பதைப் பார்க்கலாம்.

Dry Needling

Dry Needling  சிகிச்சை என்பது, சிறு சிறு ஊசிகளை (Needles) எந்தெந்த இடத்தில் வலி உள்ளதோ அல்லது மறைத்து போதல் உள்ளதோ அந்த இடத்தில ஊசிகளை வைத்து அந்த நரம்பு மற்றும் தசைகளை தூண்டச்(Stimulate) செய்வதால் இழந்த வலிமை மற்றும் உணர்வு (Sensation) போன்றவற்றை மீட்டெடுக்க முடியும். Nerve Entrapment ஆல் வரும் வலிகளுக்கு மருந்தாக Dry Needling சிகிச்சைகள் உள்ளன என ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.

அறுவை சிகிச்சை முறை (Surgical Treatment):

நான் மேலே கூறியது போல், நமது முதுகெலும்பில் பல்லாயிரக்கணக்கான நரம்புகள் மற்றும் நிறைய உதிரி பாகங்கள் உள்ளன. இவை அனைத்துமே மிக மிக முக்கியமானவை. எனவே, அறுவை சிகிச்சை முறை என்று போனால் எந்த பாகத்திற்கும் பிரசனை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே எவ்வளவு முடியுமோ அந்த அளவு அறுவை சிகிச்சையைத் தவிர்க்க வேண்டும். கடந்த வாரத்தில் கூறியது போல, அறுவை சிகிச்சையை விட மேம்படுத்தப்பட்ட பிஸியோதெரபி சிகிச்சைகளின் மூலம் குணமடைய வாய்ப்புகள் அதிகம்.

Nerve Block Injection:

இவ்வகையான மருந்து ஊசிகள் பாதிக்கப்பட்ட நரம்புகளில் போடப்படுகின்ற ஊசி. இதனால் பாதிக்கப்பட்ட நரம்புகளில் ஏற்படும் வலி, மறத்துப் போதல் போன்றவைகளை குணப்படுத்தலாம். ஆனால், இதற்குப் பிறகு உடற்பயிற்சிகள் செய்தாலே முழுமையாக குணமடைய முடியும்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com