19. அசைக்க முடியாத அளவுக்கு கழுத்து வலியா? Spondylosis பிரச்னையா?

'Spondylosis' என்பது கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் ஏற்படும் ஒன்று.
19. அசைக்க முடியாத அளவுக்கு கழுத்து வலியா? Spondylosis பிரச்னையா?

'Spondylosis' என்பது கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் ஏற்படும் ஒன்று. 'Isis' என்றால் வீக்கம் எனப் பொருள் மருத்துவ மொழியில். 'Spondylosis' என்றால் முதுகுத்தண்டில் ஏற்படும் வீக்கம் (Inflammation). இதனால் வலி, வீக்கம், இயக்கங்கள் முடக்கம் (Immobility) போன்றவைகளும் ஏற்படும். இது ஒரே நாளில் ஏற்படுவது அல்ல. இது சிறிது சிறிதாக ஏற்பட்டு ஒரு நாளில் 'Spondylosis' ஆக மாறுகின்றது. அதாவது உங்கள் முதுகுத்தண்டில் (கழுத்து / முதுகு) போகப்போக ஏற்படும் 'Degenerative changes' எனப்படும் தேய்மானம் மூலம் 'Spondylosis' ஏற்படுகின்றது.

'Degeneration' என்றால் நம் உடம்பில் உள்ள ஒன்று, அதாவது சரியாக வேலை செய்து கொண்டிருந்த ஒன்று, அதிக வேலைப்பளுவினால் செயலிழந்து போவது என்று அர்த்தம். உதாரணமாக, 'Regeneration' என்பது உற்பத்தியாவது, 'Degeneration' என்பது செயலிழந்து போவது. இப்போது 'Degeneration' எப்படி மற்றும் எதனால் ஏற்படுகின்றது என்பதைப் பார்ப்போம். இதற்கு  முக்கிய காரணம் 'Wear and Tear' என்பார்கள் மறுத்து உலகில். அதாவது திரும்ப திரும்ப ஒரு இயக்கத்தை செய்வதால், அந்த இயக்கம் ஏற்படும் இடம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செயலிழக்க ஆரம்பிக்கின்றது. ஏனென்றால் அந்த இடத்தில திரும்பத் திரும்ப ஏற்படும் அழுத்தம். இதனாலேயே 'Degeneration' என்னும் தேய்மானம் ஆரம்பிக்கின்றது.

இந்த 'Degeneration' ஏற்பட ஏற்பட அந்த பகுதி இன்னமும் தேய்கின்றது. இந்தத் தேய்மானம் அதிகரிக்க, அதிகரிக்க 'Spondylosis' ஏற்படுகின்றது. உதாரணமாக, நீங்கள் திரும்பத் திரும்ப உங்கள் கழுத்து மற்றும் முதுகுப் பகுதியை உபயோகித்தாலோ, தவறான 'Posture' களில் தொடர்ந்து உட்காருவதாலோ ஏற்படுவதே இந்த கழுத்து / முதுகு வீக்கம் (Cervical / Lumbar Spondylosis) ஆகும். அதாவது நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டோ அல்லது முதுகு சம்பந்தமான பளு தூக்கும் வேலைகள் செய்வதாலோ ஏற்படுவதே இந்த 'Spondylosis' ஆகும். எப்படி என்றால், நீங்கள் நீண்ட நேரம் திரும்பத் திரும்ப ஒரே இடத்தில உட்காருவதால் உங்கள் தசைகள் இறுக்கம் (Stiff) அடைகின்றது. இந்த இறுக்கத்துடனேயே (Stiffness) நீங்கள் திரும்பத் திரும்ப உட்காருவதால், இந்த இறுக்கமான தசைகள் உங்கள் முதுகெலும்பின் (கழுத்து/முதுகு) இயக்கத்தை மட்டுப்படுத்துகின்றது. இதனால் உங்கள் முதுகெலும்புகள் தேய ஆரம்பிக்கின்றது. இந்த தேய்மானம் அதிகமாக 'Degeneration' ஏற்படுகின்றது. இதுவே Cervical/Lumbar Spondylosis ஆகும். இது அதிகமாக உங்களுக்கு வலி, வீக்கம், மறத்துப் போதல் போன்றவை ஏற்பட ஆரம்பிக்கும். அதே போல், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தேய்மானம் அதிகரித்து, இரண்டு முதுகெலும்புக்கிடையில் உள்ள இடைவெளி (Space) குறைய ஆரம்பிக்கும்.

இந்த இடைவெளி குறையக் குறைய 'Degenration'-ம், அதே போல் இரண்டு முதுகெலும்புக்கிடையில் உள்ள 'Disc' மீதும் அழுத்தம் ஏற்படும். இதனால் நிறைய பாதிப்புகள் ஏற்படும். ஏனெனில் இந்த இடைவெளி குறைவதால் 'Disc' வெளியே வந்து நரம்புகளில் அழுத்தி, மறத்துப்போதல் (Numbness), ஊசி குத்துவது போன்ற வலி (Tingling) போன்றவைகளும் ஏற்படும். 'Spondylosis' 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு அதிகம் ஏற்படும். ஏனெனில், பொதுவாக இந்த வயதில் எலும்புகளின் தேய்மானம் (Degeneration) அதிகரிக்கும். எனவே, இதை முன்கூட்டியே அறிந்து 'Degeneration' அதிகம் ஏற்படாமல் பார்த்துக்  கொள்ளலாம்.  ஆனால், இந்நாளில் Computer, Cell Phone போன்றவை உங்களை இயங்க விடாமல், ஒரே இடத்தில் உட்கார வைப்பதால், 'Degeneration' மிக இளம் வயதிலேயே, அதாவது 25 வயதிலேயே ஆரம்பிக்கின்றது. குறிப்பாக, கணினி வேலை செய்பவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது ஏற்படாமல் தவிர்க்க, நீங்கள் நீண்ட ஒரே இடத்தில்  உட்காருவதை தவிர்க்க வேண்டும்.

இப்போது 'Cervical/Lumbar Spondylosis' வந்தால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதைப் பார்ப்போம்.

அறிகுறிகள் (Symptoms):

➜ தசை இறுக்கம் (Stiffness)

➜ வலி (Pain)

➜ வீக்கம்(Swelling)

➜ இயக்கக் கட்டுப்பாடு (Reduced Movements of Neck and Back)

➜ மறத்துப் போதல் (Numbness)

➜ ஊசி குத்துதல் போன்ற வலி (Tingling)

➜ தசை பலவீனம் (Weakness of Muscles)

இப்போது 'Spondylosis' யை உறுதி செய்ய என்னென்ன சோதனைகள் (Investigations) செய்ய வேண்டும் என்பதைப் பாப்போம்.

Investigations:

➜ X-ray 

➜ MRI 

X-ray:

X-ray சோதனை 'Spondylosis' ஐ கண்டுபிடிக்க மிக மிக முக்கியமான ஒன்று. X-ray மூலம் எவ்வளவு தேய்மானம், Degeneration, முதுகெலும்புக்கிடையிலான இடைவெளி குறைவு எவ்வளவு என்பதை எல்லாம் கண்டுபிடிக்க முடியும்.

MRI:

MRI சோதனை மூலம், 'Disc' மீதான அழுத்தம், நரம்பு அழுத்தம் எவ்வளவு என்பதை கண்டுபிடிக்க முடியும். ஆனால், "Spondylosis" ஐ பொறுத்தவரை 'X-ray' சோதனையே போதுமானது.

இப்போது 'Spondylosis'-க்கான சிகிச்சை முறைகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

சிகிச்சை முறைகள்:

'Spondylosis' க்கு மிகச் சிறந்த மருத்துவம்  பிசியோதெரபி சிகிச்சைகள். ஏனெனில் இதன் மூலமே 'Spondylosis' ஏற்படுத்தும் மூலகாரணியை (Cause) குணப்படுத்த முடியும். இதர Current சிகிச்சைகள் மிகவும் தற்காலிகமான தீர்வையே தரும். Manual Therapy, Trigger point release, Home Exercises, Strengthening போன்ற மருத்துவ  முறைகளே 'Spondylosis' முழுமையாக குணப்படுத்த உதவுகின்றது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே 'Spondylosis' ஐ தவிர்க்க இதை நாம் பின்பற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com