அதிகாரம் - 17. அழுக்காறாமை

பொறாமை இல்லாதவரே ஒழுக்கமானவர். பகைவரால் வரும் அழிவைவிட அதிக அழிவை பொறாமை தந்துவிடும். பொறாமை உள்ளவரைவிட்டு உறவுகள் பிரிந்துவிடும். பொறாமை உடையவர் பொருள்களால் நிறைவடைய மாட்டார்கள்.
Published on
Updated on
1 min read

அதிகார விளக்கம்

பொறாமை இல்லாதவரே ஒழுக்கமானவர். பகைவரால் வரும் அழிவைவிட அதிக அழிவை பொறாமை தந்துவிடும். பொறாமை உள்ளவரைவிட்டு உறவுகள் பிரிந்துவிடும். பொறாமை உடையவர் பொருள்களால் நிறைவடைய மாட்டார்கள்.

161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு.

ஒழுக்கம் மாறாது இருக்க ஒருவர், தன் மனத்தில் பொறாமை அற்ற இயல்பை பெற வேண்டும்.

162. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்.

யாரிடத்திலும் பொறாமை பெறா நிலையைப் பெறுவதைவிட, விரும்ப வேண்டியவற்றில் நகரானது வேறு இல்லை.

163. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்.

அறச் செயல்கள் தேவையற்றது என்பவர்கள், பிறச் செயல்களையும் செய்யாமல் அழுக்கற்றுப் போவார்கள்.

164. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து.

இழிவான குணத்தால் ஏற்படும் துன்பத்தை அறிந்தவர்கள், பொறாமை (அழுக்கு மனம்) எண்ணத்துடன் தேவையற்றதைச் செய்ய மாட்டார்கள்.

165. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்கியும் கேடீன் பது.

பொறாமை எண்ணம் உள்ளவர்களுக்கு வெளியே இருந்து துன்பம் வரத் தேவையில்லை. அவர்களிடம் இருக்கும் பொறாமை எண்ணமே போதும்.

166. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்.

கொடுப்பதை பொறாமையால் தடுப்பவனின் உறவுகளும், உடுப்பதும், உண்ணுவதும் இல்லாமல் கெட்டுப் போகும்.

167. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்.

பொறாமைக் குணம் கொண்டவருக்கு அந்தப் பொறாமைக் குணமே தனது ஆற்றலைக் காட்டிவிடும்.

168. அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்.

பொறாமை என்பது ஒரு பாவச்செயல். பொறாமை கொண்டவரை அது தீய வழியில் தள்ளிவிடும்.

169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.

பொறாமை உள்ளம் கொண்டவரின் ஆக்கச் செயல்களும், பொறாமை இல்லாதவரின் அழிவும் நினைக்கப்படும்.

170. அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

பொறாமைக் குணம் இல்லாதவரை உலகம் ஒதுக்குவதில்லை: பொறாமைக் குணம் கொண்டவர் எவ்வளவு இருந்தாலும் நிறைவடைவதில்லை.

குறிப்பு

இந்த அதிகாரத்தில் உள்ள குறள்கள் குறித்த விரிவான, தெளிவான விளக்கத்துக்கு தொடர்புகொள்ள - சிவயோகி சிவகுமார் (9444190205)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com