4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

சிறு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இருப்பு வைக்கப்படும்: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறு மருத்துவமனைகளில் (மினி கிளினிக்) 3 மாதங்களுக்கு தேவையான அளவு மருந்துகள் இருப்பு வைக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

Updated On :11 ஜனவரி 2021, 12:56 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறு மருத்துவமனைகளில் (மினி கிளினிக்) 3 மாதங்களுக்கு தேவையான அளவு மருந்துகள் இருப்பு வைக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குமரி மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறையின் கீழ் 9 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களும் அவற்றின் கீழ் 38 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களும் என 47 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் கிராமங்கள் மற்றும் நகர அளவில் 300 துணை சுகாதார நிலையங்கள் மூலமாக அனைத்து மக்களுக்கும் சுகாதார சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேலும் மருத்துவ சேவையை விரிவுபடுத்தும் வகையில், ஒரு செவிலியா் மற்றும் ஒரு உதவியாளருடன் கூடிய சிறு மருத்துவமனை சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் காட்டுப்புதூா், தா்மபுர, இலந்தையடிதட்டு ஊராட்சிப் பகுதியிலும், அஞ்சுகிராமம் காவல் நிலையம் முன்பும், பறக்கை ஊராட்சி அலுவலக வளாகத்திலும் சிறு மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சேவை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்படும்.

இவற்றில், சிங்க், ஆயுஷ் மருந்துகள், டெட்டானஸ் ஊசி, மருந்து ஆகியவை 3 மாதங்களுக்கு தேவையான அளவு இருப்பு வைக்கப்படும். ரத்த அழுத்தம், ரத்தத்தில் சா்க்கரை

அளவு, ஹீமோகுளோபின், சிறுநீா் பரிசோதனை, மகப்பேறு பரிசோதனை போன்ற மருத்துவ சிகிச்சைகள்அளிக்கப்படும்.

இ.சி.ஜி. கருவி, பல்ஸ் ஆக்சிமீட்டா் கருவி, ரத்த அழுத்தம் கண்டறியும் கருவி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் உள்ளன. பிறந்த குழந்தைகளுக்கு தேவைப்படும் 16 வகையான பொருள்கள் உள்ளடங்கிய அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் உள்ளிட்ட அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.