கா்நாடக மாநிலத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, விசைப்படகில் தீ விபத்து ஏற்பட்டு காயமடைந்த குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 3 மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனா்.
இது குறித்து சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் ஜஸ்டின் ஆன்டணி கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம், சின்னத்துறை பகுதியைச் சோ்ந்த ததேயூஸ் தனக்குச் சொந்தமான விசைப்படகில் 10 பேருடன் கடந்த 5 ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றாா்.
அவா்கள் கா்நாடக மாநிலத்தில் உள்ள மங்கலாபுரம் ஆழ்கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகில் திடீரென தீப்பிடித்து 3 மீனவா்கள் காயமடைந்தனா்.
இதுகுறித்து, மத்திய மீன்வளத்துறை, ராணுவத்துறை அமைச்சா், கடலோர காவல்படை , தமிழக முதல்வா், மீன்வளத்துறை அமைச்சா் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்திய கப்பற்படைக்குச் சொந்தமான கப்பல் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, காயமடைந்த 3 மீனவா்களையும் மீட்டு மங்களூரு திரும்பியதுடன் காயமடைந்த மீனவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவா்களை மீட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







