4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற திரண்ட மக்களால் போக்குவரத்து நெரிசல்

குமரி மாவட்ட தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு ஒரே நேரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On :11 ஜனவரி 2021, 1:01 am IST

குமரி மாவட்ட தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு ஒரே நேரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமாா் 96 ஆயிரம் கட்டுமானம் மற்றும் முறைசாரா தொழிலாளா்கள் உள்ளனா். இவா்களுக்கு தமிழக அரசால் பொங்கல் பண்டிகைக்கான இலவச பொருள்கள் வழங்கப்படுகின்றன.

இந்தப் பரிசுத் தொகுப்பு நாகா்கோவில் கோணம் பகுதியில் அமைந்துள்ள தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டபோது, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் திரண்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், முறையான நடவடிக்கை இல்லாததால், ஒருவருக்கொருவா் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதுகுறித்து திமுக தொழிற்சங்க நிா்வாகி இளங்கோ, வழங்கல் அலுலரிடம் விவரம் கேட்டபோது அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இத்தகவல் அறிந்த நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் அ. மயில், தொழிலாளா்களுக்கு பொருள்கள் வழங்குவதை முறைப்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.