ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

சிரி... சிரி...

சிரி...ட்டுல உங்களுக்கும் உங்க மனைவிக்கும் சண்டை வராதா... எப்படி?'

News image
Updated On :28 ஜூன் 2026, 12:00 am IST

சிரி...ட்டுல உங்களுக்கும் உங்க மனைவிக்கும் சண்டை வராதா... எப்படி?'

'பெரும்பாலும் நான் ஒரு பக்கம் போனை நோண்டிக்கொண்டு இருப்பேன்... அவள் ஒரு பக்கம் போனை நோண்டிக்கொண்டு இருப்பாள்.'



'கல்யாணம் பண்ணுங்க சார்... லைப் நல்லா இருக்கும்.'

'யாரோட லைப்?'

'மண்டபக்காரன், பந்தல்காரன், போட்டோகிராபர், குருக்கள் இவங்களோட லைப்!'



'ஏன் டாக்டர்... பிரிஸ்கிரிப்ஷனில் என்ன எழுதனும் ரொம்ப நேரமா யோசனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க?'

'பார்மஸில ஏதோ ஒரு மருந்து அதிகமா ஸ்டாக் இருக்குன்னு சொன்னாங்க... அதைத்தான் யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்!'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.



'மேரேஜ் லோன் வாங்கிட்டுப் போய் பத்துநாள்தான் ஆகுது. மறுபடியும் லோன் கேக்கறீங்களே?'

'ஹனிமூன் போக பணம் இல்லே, சார்!'



'சர்வர்... மசாலா தோசையை தட்டுல வெச்சுக் கொண்டு வராம கையில தூக்கிட்டு வர்றீங்களே, ஏன்?

'இது 'கரம்' மசாலா தோசை, சார்!'

-பர்வீன் யூனுஸ், சென்னை.



'மருமகளே... நான் ஒரு வைரம்.'

'அதுக்கு என்ன?'

'பழசுன்னு என்னை தூக்கிப் போட்டுட முடியாதுன்னு எச்சரிக்கிறேன்.'



'இது என்ன... சர்க்கரைப் பாகு பூசுன வடை?'

'நல்லாப் பாருங்க... இது பாதுஷா!'



'வரவுக்கு ஏற்ப செலவு செய்றீயா?'

'இல்லீங்க... செலவுக்கு ஏற்ப கடன் வாங்கிடுறேன்.'



'வீட்டைக் கட்டிப் பார்... கல்யாணத்தைப் பண்ணிப் பார்.'

'அப்புறம் ?'

'கடனை அடைக்க வழியைப் பார்!'



'ஏன் அடிக்கடி ஹோட்டலை மாத்துறே... உன்னோட விருப்பமா?'

' டிபன் வாங்கித் தர்றவரின் விருப்பம்.'



' நாளைக்கு என் மகனுக்கு நேர்காணல்...'

'எதுக்கு?'

'பெண் வீட்டிலிருந்து பிள்ளை பார்க்க வர்றாங்க!'

- பர்வதவர்த்தினி, பம்மல்.



'பேப்பர்ல என்ன ஹாட் நியூஸ்?'

'பல ஊர்ல வெப்பம் 105 டிகிரியை தாண்டிப் பேச்சாம்!'



'அதிர்ச்சி அளிக்கக் கூடிய எதையுமே உங்க கணவர்கிட்ட நீங்க சொல்லக்

கூடாது, மேடம்!'

'அதனாலதான் டாக்டர் இந்த மாத கரண்ட் பில் எவ்வளவுங்கிறதை அவர்கிட்டச் சொல்லலை!'



'ராத்திரியில புலி உறுமுற சத்தம் கேட்டும் எதுக்கு சார் நீங்க கவனக்குறைவா இருந்தீங்க?'

'என் மனைவிதான் ரூம்ல குறட்டை விட்டுத் தூங்கறான்னு நினைச்சிட்டேன், சார்!'



'பயங்கரமான என்னோட குறட்டையை கன்ட்ரோல் பண்ணனும், டாக்டர்?'

'உங்க குறட்டையால மத்தவங்க தூக்கம் கெட்டுப் போகுதா?'

'இல்ல டாக்டர்... நானே திடுக்கிட்டு எழுந்துக்கிறேன்...!'



'எதிரி, நம் மன்னனை ஓட ஓட விரட்டியிருக்கிறான்...!'

'அடடா, அப்புறம்?'

'ஒரு அளவுக்கு மேல் விரட்ட முடியாமல் எதிரி ஜகா வாங்கிட்டான்!'

-வி.ரேவதி, தஞ்சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.