ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

நீதிக் கதைகள்! தேவையில்லாத பயமே கவலைகளுக்குக் காரணம்!

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.

News image
Updated On :29 ஜூன் 2026, 4:43 pm IST

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அதைக் கண்டு மற்ற விலங்குகள் அஞ்சி நடுங்கின. ஆனால் சிங்கத்திற்கு சேவல் கூவும் குரல் கேட்டால் நடுக்கமும் எரிச்சலும் உண்டாகும்!

"ம்...எனக்கு எவ்வளவு பலம் இருந்தாலும் நிம்மதியே இல்லையே!....இந்தச் சேவல் கூவும் சப்தம் என்னை நடுநடுங்க வைக்கிறதே!....எத்தனை நாட்களுக்கு இப்படி பயந்து கொண்டு வாழ்வது?'' என்று தனக்குத் தானே புலம்பிக்கொண்டிருந்தது. 

அப்போது அந்த வழியாக யானை ஒன்று கவலை தோய்ந்த முகத்துடன் வந்து கொண்டிருந்தது. யானையைக் கண்ட சிங்கம், "யானையாரே!..... உங்களை எதிர்க்கும் விலங்கு இந்தக் காட்டில் யார் இருக்கிறார்கள்?... உங்கள் உருவத்தைக் கண்டாலே மற்ற விலங்குகள் அஞ்சி ஓடுமே!..... நீங்கள் எதற்காகக் கவலைப்படுகிறீர்கள்?.... என்ன காரணம்?'' என்று கேட்டது.

அதற்கு யானை, "சிங்கமே!..... நீ என்னை அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறாய்!....இதோ, என் காதுகள் அருகில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா?.... இவை என் காதுக்குள் போய்க் கொட்டிவிட்டால் என் உயிர் போவது போல் வலிக்கும்!.... அதுக்காகத்தான் என் காதுகளை அசைத்துக் கொண்டே இருக்கிறேன்!.... பெயருக்குத்தான் எனக்குப் பெரிய உருவம்!...... ஆனால் நான் இந்தச் சிறிய குளவிக்கு அஞ்சித்தான் வாழ வேண்டியிருக்கிறது!..." என்று சொன்னது யானை!

யானை சொன்னதைக் கேட்ட சிங்கம், "ஓ!.... இந்த உலகில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏதோ ஒரு கவலையும், அச்சமும் இருக்கத்தான் செய்கிறது. எனக்குக் கிடைத்த எத்தனையோ இன்பங்களை மறந்து விட்டு சிறிய ஒரு விஷயத்தை நினைத்து, நான் கவலைப் பட்டுக்கொண்டிருப்பதில் என்ன லாபம்?..." என்று புரிந்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழத்தொடங்கியது!

Summary

A moral story that children should know.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.