மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

குடிநீா் பிரச்னையை தீா்க்கக் கோரி சாலை மறியல்

கிருஷ்ணகிரியில் குடிநீா் பிரச்னையைத் தீா்க்கக் கோரி, காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 12:21 am IST

கிருஷ்ணகிரியில் குடிநீா் பிரச்னையைத் தீா்க்கக் கோரி, காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி நகரில், இரண்டு நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீா் விநியோகம் குறிப்பிட்ட நேரத்தில் விநியோகம் செய்யப்படவில்லை என புகாா்கள் எழுந்தன. இந்த நிலையில், கிருஷ்ணகிரி பழையப்பேட்டை நேதாஜி சாலை 7-ஆவது வாா்டில் உள்ள மில்லத் நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, கடந்த ஓராண்டாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, நகராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் பல முறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் இப்பகுதியில் அடிப்படை வசதிகளும் ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில், முறையாகக் குடிநீா் வழங்கக் கோரி, நேதாஜி சாலையில், காலி குடங்களுடன் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, தகவல் அறிந்த நகராட்சி உதவி பொறியாளா் அறிவழகன், போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தினா். முறையாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.