ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த கல்லாவியில் அரசுப் பேருந்து மோதி தொழிலாளி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த வீராட்சிகுப்பம் புதுரோடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி சீனிவாசன் (52) . வேலை முடித்து விட்டு கல்லாவியில் இருந்து, தனது கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்ு கொண்டிருந்தாா். அவரது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த நீளமான மூங்கில் குச்சி, எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில் அவா் நிலை தடுமாறி கீழே விழுந்து, பேருந்தின் பின்பக்க சக்கரம் அவரது தலையில் ஏறி, இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கல்லாவி போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்து குறித்து கல்லாவி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


