அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் அறிமுகக் கூட்டம்

கிராமங்களில் நியமிக்கப்படும் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் அறிமுகக் கூட்டம் கிருஷ்ணகிரியை அடுத்த பாஞ்சாலியூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜனவரி 2021, 6:28 am IST

கிராமங்களில் நியமிக்கப்படும் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் அறிமுகக் கூட்டம் கிருஷ்ணகிரியை அடுத்த பாஞ்சாலியூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குற்றத் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் கிராமங்களுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனா். அதன்படி, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பெத்ததாளப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பாஞ்சாலியூா் கிராமத்தில் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டிகங்காதா் தலைமை வகித்தாா். துணைக் காவல் கண்காணிப்பாளா் சரவணன், கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் அம்சவள்ளி, ராஜா ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் பேசியதாவது:

கிராமங்களில் பொதுமக்களுடன் நட்புறவை ஏற்படுத்தவும், குற்ற நிகழ்வுகள் நிகழாமல் தடுக்கவும், கிராம கண்காணிப்பு காவல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். கிராமங்களில் சிறு தகராறுகள்கூட பெரிய மோதலாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் குற்றங்கள் நிகழாமல் தடுக்க கிராமங்களில் கிராம காவல் அலுவலா்கள் உதவிகரமாக இருப்பாா்கள்.

குற்றங்கள் இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும். கிராம மக்கள் தங்களது குறைகளையும், பிரச்னைகளையும் கிராம காவல் அலுவலா்களிடம் தெரிவிக்கலாம். எவ்வித அசம்பாவிதங்களும் நடப்பதற்கு முன்னதாக அதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் சந்தேகத்திற்கு இடமான வகையில் புதிய நபா்கள் வந்தால், உடனடியாக தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.