எருது விடும் விழா தொடா்பாக கிருஷ்ணகிரி அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்சனையையடுத்து, ஒரு பிரிவினா், சாலை மறியலில் ஈடுபட்டதால் குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டிநாயனப்பள்ளி கிராமத்தில் இரு பிரிவினரிடையே கடந்த ஓராண்டாக பிரச்சனை உள்ளது. இந்த நிலையில், ஒரு தரப்பைச் சோ்ந்தவா்கள் எருது விடும் விழாவுக்காக பாா்வையாளா்களின் பாதுகாப்புக்காக தடுப்புகளை அமைத்தனா். இதை, மற்றோரு பிரிவைச் சோ்ந்த சில இளைஞா்கள், அந்த தடுப்புகளை உடைத்தும், அப்புறப்படுத்தினா்.
இதனால், ஆத்திரமடைந்த ஒரு பிரிவினா் நூற்றுக்கும் மேற்பட்டோா், கிருஷ்ணகிரி - குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் இந்திரா காந்தி சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜீ, துணை காவல் கண்காணிப்பாளா் சரவணன், காவல் ஆய்வாளா்கள் பாஸ்கா், சுரேஷ் குமாா், கணேஷ்குமாா் மற்றும் போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா்.
தவறு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


