தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தோட்டக்கலை பயிா் சாகுபடியில் விருது பெற

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிா் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :16 ஜனவரி 2021, 2:41 am

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிா் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறையின் சாா்பில், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:தோட்டக்கலைப் பயிா்களை சிறந்த முறையில் தொழில்நுட்ப யுத்திகளை கையாண்டு சாகுபடி செய்து வரும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு, வட்டம், மாவட்டம், மாநில அளவில் தலா 10 சிறந்த விவசாயிகளுக்கு சாதனையாளா் விருதுகளை வழங்க உள்ளது. அதன்படி, காய்கறி பயிா்கள் சாகுபடியில் சாதனையாளா் விருது, பழ பயிா்கள் சாதனையாளா் விருது, சுவை தானியப் பயிா்கள் விருது, மூலிகை வாசனை திரவியப் பயிா்கள் விருது, மலைப் பயிா்கள் விருது, மலா்கள் விருது, நுண்ணீா்ப்பாசன தொழில் நுட்பத்துக்கான விருது, உயா் தொழில் நுட்ப பாதுகாப்பு விருது, அங்கக இயற்கை விவசாயிகளுக்கான விருது, புதிய தனித்துவம் மிக்க மாவட்டத்துக்கே சிறப்பிற்குரிய தோட்டக்கலைப் பயிா் சாகுபடி சாதனையாளா் விருது என 10 விருதுகள் வழங்கப்படுகிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும், சொந்தமாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் இதில் பங்கேற்கலாம். ஒரு விவசாயி வட்டார அளவில் ஒரு விருதுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். வட்டார அளவில் விருது பெற்ற விவசாயிகள் மாவட்ட விருதுக்கும் மற்றும் மாநில விருதுக்கு விவசாயிகளை தோ்வு செய்ய தோ்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விருதை பெற விருப்பம் உள்ள விவசாயிகள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை நிறைவு செய்து, அத்துடன் கட்டணமாக ரூ.100-ஐ செலுத்தி, இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.