எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்கால் புதிய அகலப் பாதையில் அதிவிரைவு ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் தொடக்கம்

காரைக்கால், டிச. 6 : மூன்று நாள்கள் நடக்ககூடிய அதிவிரைவு ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நாகூர் முதல் காரைக்கால் இடையே புதிதாக போடப்பட்டுள்ள அகலப் பாதையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. காரைக்கால் முதல் பேரள

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 9:57 pm

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால், டிச. 6 : மூன்று நாள்கள் நடக்ககூடிய அதிவிரைவு ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நாகூர் முதல் காரைக்கால் இடையே புதிதாக போடப்பட்டுள்ள அகலப் பாதையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

காரைக்கால் முதல் பேரளம் வரை இருந்த மீட்டர்கேஜ் ரயில் சேவை கடந்த 1980ஆம் ஆண்டு வாக்கில் போதுமான வருவாய் இல்லையென்ற காரணத்தால் நிறுத்தப்பட்டது. பிறகு இந்த ரயில் தண்டவாளம் அகற்றப்பட்டது முதல் காரைக்கால் ரயில் இணைப்பு இல்லாத தீவு போல இருந்துவந்தது.

ஏற்கெனவே நாகூர் வரை ரயில் போக்குவரத்து இருக்கும் நிலையில் காரைக்காலை இணைக்கச் செய்ய நாகூர் முதல் காரைக்கால் வரை 10.5 கிலோ மீட்டர் நீளத்தில் ரூ.110 கோடியில் புதிய அகல ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு அண்மையில் முடிக்கப்பட்டது.

இந்த பாதையில் 7 பெரிய ஆறுகளின் குறுக்கே ரயில் பாலமும், 32 வாய்க்கால்களின் குறுக்கே பாலம் மற்றும் சுரங்கப் பாதை அமைத்தல், மேலும் கடற்கரையோரப் பாதை என்பதால் திட்டப்பணி முடிவடைய குறித்த காலத்தையும் கடந்ததாக கூறப்படுகிறது.

காரைக்காலில் பெரிய ரயில் நிலையமும், திருமலைராயன்பட்டினத்தில் ஒரு நிலையமும் அமைந்துள்ளது. வரும் டிச.21ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழாவுக்குள் ரயில் சேவை தொடங்கவேண்டுமென்பது காரைக்கால் மக்களின் கோரிக்கை. இதை மையமாக வைத்து இந்த பாதையில் பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டுவருகிறது.

ஏற்கெனவே தண்டவாளத்தில் கொட்டும் வகையில் ஜல்லிகளை ஏற்றிவந்த சரக்கு ரயில் சோதனை ஓட்டம் நடத்திமுடிக்கப்பட்ட நிலையில், பயணிகள் ரயில் இயக்கும் சோதனையாக, அதுவும் அதிவிரைவு ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் 3 நாள் சோதனையாக செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கப்பட்டது.

காரைக்கால் தனியார் துறைமுகம் அருகே அதிவிரைவு ரயில் என்ஜினுக்கு சிறப்பு பூஜைகள் போடப்பட்டது. தொடர்ந்து ரயில் பாதையில் சோதனை ஓட்டம் தொடங்கியது. 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய என்ஜின் துறைமுகம் அருகே தொடங்கி காரைக்கால் ரயில் நிலையத்தை மாலை 5.20 மணிக்கு வந்தடைந்தது.

அடுத்த 2 நாள்களில் எப்போது வேண்டுமானாலும் பல்வேறு முறை சோதனை நடத்தப்படுமெனவும், இதன் மூலம் ரயில்பாதையில் ஏதேனும் குறைபாடு இருப்பின் கண்டறியமுடியும். எனவே அடுத்த 2 நாள்களும் ரயில் பாதை அருகே பொதுமக்கள், கால்நடைகள் செல்லாமல் கவனமாக இருக்கவேண்டுமென ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சனிப்பெயர்ச்சி விழாவுக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில் தற்போதுதான் சோதனை ஓட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அதனை நிவர்த்தி செய்யவேண்டும். பிறகு ரயில்வேத்துறையின் விதிமுறைப்படி பாதுகாப்பு ஆணையர் நேரில் ஆய்வு செய்யவேண்டும். இவர் தரும் அறிக்கைக்குப் பிறகு ரயில் இயக்குவது குறி்த்த நாள் குறிக்கவேண்டும். இவையெல்லாம் இரு வாரத்தில் நடந்துவிடுமா என்பது பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.