எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மதுபாட்டிகளில் விற்பனை விலை அச்சிடவேண்டும் - மதுக்கடை உரிமையாளர்களுக்கு கலால்துறை உத்தரவு

காரைக்கால், டிச. 7 : காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களில் அதன் அதிகபட்ச விலையை அச்சிடவேண்டுமென கலால்துறை கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. காரைக்கால் மாவட்ட கலால

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 9:58 pm

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால், டிச. 7 : காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களில் அதன் அதிகபட்ச விலையை அச்சிடவேண்டுமென கலால்துறை கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.

காரைக்கால் மாவட்ட கலால்துறை துணை ஆணையர் ஆர்.சந்ந்திரசேகரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது :

அனைத்து மதுபான மற்றும் பீர் பாட்டில்கள் மீது 1.9.2011 முதல் அதன் அதிகபட்ச விலை (எம்.ஆர்.பி) அச்சிடவேண்டுமென அனைத்து மதுபான மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு மதுபான பாட்டில்கள் மீது அதிகபட்ச சில்லறை விலை அச்சிடாமல் விற்கப்பட்டால் அதன் தொடர்பான புகார்களை நுகர்வோர் தெரிவிக்கலாம். இதன்படி துணை ஆணையர் (கலால்) கைபேசி எண் - 9443124851 தொலைபேசி எண் 04368-222467, கலால் அதிகாரி கைபேசி எண் - 9245363145 தொலைபேசி எண் 04368-222637 தொடர்புகொண்டு தெரிவிக்கவேண்டும்.

ஒவ்வொரு சில்லறை விற்பனைக் கடைகளிலும் அங்கு விற்கப்படும் மதுவகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை பற்றிய விலைப்பட்டியல் நுகர்வோரின் பார்வைக்கு வைக்கவேண்டும்.

பார் வசதியுடன் மதுபானக் கடைகளின் உணவகங்கள் காற்றோட்ட வசதியுடன் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்படவேண்டும். பார் வசதியில்லாத மதுபானக் கடைகளில், நுகர்வோர் மது அருந்துவதோ, அல்லது அதற்கு கடைக்காரரே உதவிபுரியும் வகையில் உணவகம் நடத்துவதோ கூடாது. விதிமுறைகளை மீறும் மதுபானக்கடை உரிமையாளர் மீது கலால் சட்ட விதிகளி்ன்கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.