

சென்னை, ஜன.9: இலவச வண்ணத் தொலைக்காட்சிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அமைக்கப்பட்ட சட்டப்பேரவைக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவின் 21-வது கூட்டம் இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவைக் கட்சிகளின் பிரதிநிதிகள் யசோதா(காங்கிரஸ்), அப்துல் பாசித்(இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), ஜெகன்மூர்த்தி(புரட்சி பாரதம்), ரவிக்குமார்(விடுதலைச் சிறுத்தைகள்). சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.