வத்தலகுண்டு, நவ. 5: வத்தலகுண்டு அருகே லாரி மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விவரம்
மதுரையிலிருந்து நெல் மூடைகளை ஏற்றிக் கொண்டு சனிக்கிழமை இரவு லாரி ஒன்று தேனிக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தேனியைச் சேர்ந்த பாண்டியன் (35) என்பவர் ஓட்டி வந்தார்.
சோழவந்தானைச் சேர்ந்த ஹஜ்மீர்ஹாசன் (35), அவரது மனைவி பானு (30), இவர்களது குழந்தை அப்துல்ஹஜீஸ் (3) ஆகியோர் வத்தலகுண்டுவில் உள்ள உறவினர் வீட்டு சடங்கில் கலந்து கொண்டு விட்டு பிரியாணியுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வத்தலகுண்டு அருகே உள்ள வெங்கடாத்திரி கோட்டை என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் சம்பவ இடத்திலேயே ஹஜ்மீர்ஹாசன் உள்ளிட்ட 3 பேரும் பலியானார்கள்.
தகவலறிந்த நிலக்கோட்டை காவல் துணைகண்காணிப்பாளர் அன்னம், காவல் ஆய்வாளர் குமரேசன் ஆகியோர் சம்சவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக லாரி டிரைவர் பால்பாண்டியனை (35) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”விஜய் மனதில் பாஜக இருக்கிறது!” குஷ்பு பேட்டி

கான் சிட்டி: முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகம்!

கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு!: ஆயில் இந்தியா
காங்கிரஸ் செய்த 5 பாவங்கள்: அஸ்ஸாம் பிரசாரத்தில் பட்டியலிட்ட மத்திய அமைச்சர்!
வீடியோக்கள்

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

