பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி: அனுமதி இல்லாததால் மாயவரம் படப்பிடிப்பு நிறுத்தம்

பண்ருட்டி, நவ.15: பண்ருட்டி பகுதியில் நடந்துவரும் மாயவரம் படப்பிடிப்பு அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதால் நிறுத்தப்பட்டது. பண்ருட்டி அருகே உள்ள செம்மேடு கிராமம் கெடிலம் நதியில் மாயவரம் படத்திற்கான பாடல் க

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:25 pm

சீனிவாசன்

பண்ருட்டி, நவ.15: பண்ருட்டி பகுதியில் நடந்துவரும் மாயவரம் படப்பிடிப்பு அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதால் நிறுத்தப்பட்டது.

பண்ருட்டி அருகே உள்ள செம்மேடு கிராமம் கெடிலம் நதியில் மாயவரம் படத்திற்கான பாடல் காட்சிகள் திங்கள்கிழமை படமெடுக்கப்பட்டது.

பண்ருட்டியில் உள்ள செம்மேடு, சேமக்கோட்டை, சேந்தநாடு(விழுப்புரம் மாவட்டம்) ஆகிய பகுதியில் படபிடிப்பு நடந்து வருகிறது. சீர்காழி, மாயவரம் பகுதியில் படபிடிப்பு முடிந்து தற்போது பண்ருட்டி வந்துள்ளனர்.

பண்ருட்டி பகுதியில் மூன்று நாட்கள் படப் பிடிப்பில் இரு பாடல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம். பொங்கல் பண்டிகைக்கு வெளிவரவுள்ள இப்படத்தை இயக்குநர் ராம்தேவ் இயக்குகிறார். இசை-சாய், டான்ஸ் மாஸ்டர்-தீனா, கதாநாயகியாக 9 ரூபாய் நோட்டு படத்தில் நடந்த இன்பநிலாவும், கதாநாயகனாக செல்வனும் (இயக்குனர்) நடிக்கின்றனர்.

திட்டமிட்டபடி இன்று காலை படப்பிடிப்புக்கு அனைவரும் ஆயத்தமாகினர். ஆனால், மாவட்டத்தில் படப்பிடிப்பு நடத்த முறையான அனுமதி பெறவில்லை என்பதால், படப்பிடிப்பை நிறுத்தும்படி போலீஸார் கூறினர். இதை அடுத்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற படப்பிடிப்புக் குழுவினர், முறையான அனுமதி பெற்ற பிறகு படப்பிடிப்பைத் தொடருவோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.