பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை: பண்ருட்டி நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு

பண்ருட்டி,அக்.14: வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு பண்ருட்டி குற்றவியல் நடுவர் 10 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். பண்ருட்டி வட்டம் ம

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:53 pm

சீனிவாசன்

பண்ருட்டி,அக்.14: வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு பண்ருட்டி குற்றவியல் நடுவர் 10 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.

பண்ருட்டி வட்டம் மருங்கூர் அரசு பள்ளி ஆசிரியர் ஆறுமுகம். இவர் 2009-ம் ஆண்டு குள்ளஞ்சாவடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த போது பின் தொடர்ந்து வந்த இருவர் கொள்ளுக்காரன்குட்டை அருகே வழிமறித்து கத்தியால் குத்தி ஒன்றரை பவுன் தங்க நகை மற்றும் ரொக்கப்பணத்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய அப்போதைய பண்ருட்டி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சிதம்பரத்தை சேர்ந்த சுரேஷ்(25), கடலூர் கண்ணாரப்பேட்டையை சேர்ந்த தஷ்ணாமூர்த்தி(25) ஆகிய இருவரை கைது செய்தனர்.

குறித்து வழக்கு பண்ருட்டி குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்து குற்றவியல் நடுவர் கலியமூர்த்தி சுரேஷ், தஷ்ணாமூர்த்தி ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.