திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

திண்டுக்கல் மாவட்டத்தில் 81 சதவீத வாக்குகள் பதிவு

திண்டுக்கல், அக். 19: இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் நகராட்சிக்கு 72.07 சதமும், பழனி நகராட்சிக்கு 76.92 சதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.   திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக புதன

Updated On :19 செப்டம்பர் 2012, 11:59 pm
திண்டுக்கல், அக். 19: இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் நகராட்சிக்கு 72.07 சதமும், பழனி நகராட்சிக்கு 76.92 சதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
  திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக புதன்கிழமை திண்டுக்கல் மற்றும் பழனி நகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு காலையில் மந்தமாகத் தொடங்கி 9 மணி வரை நகராட்சிகளுக்கான பதிவு 5.8 சதமாக இருந்தது. மாலை 3 மணி வரை 55.19 சதவீத வாக்குகளே நகராட்சிகளில் பதிவானது. மாலையில் வாக்காளர்கள் பெருமளவில் வாக்களிக்க வந்ததால் நகராட்சிகளுக்கான வாக்குப்பதிவு 73.38 சதவீதமாக நிறைவு பெற்றது. திண்டுக்கல் நகராட்சிக்கான வாக்குப் பதிவு 72.07 சதவீதமாகவும், பழனி நகராட்சிக்கு வாக்குப் பதிவு 76.92 சதவீதமாகவும் பதிவானது.
   பேரூராட்சிகளுக்கு நடைபெற்றத் தேர்தலில் 83.22 சதவீத வாக்குகள் பதிவானது. வத்தலகுண்டு பேரூராட்சியில் 75.97 சதம், பாளையம் பேரூராட்சியில் 86.57சதம், பாலசமுத்திரம் பேரூராட்சியில் 86.7சதம், பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் 79.76சதம், அகரம் பேரூராட்சியில் 85.79 சதம், கன்னிவாடி பேரூராட்சியில் 83.93 சதம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் 84.22 சதம், சேவுகம்பட்டி பேரூராட்சியில் 85.24சதம், எரியோடு பேரூராட்சியில் 83.32 சதம் வாக்குகள், நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் 85.11 சம், ஆயக்குடி பேரூராட்சியில் 81.71 சதம், தாடிக்கொம்பு பேரூராட்சியில் 85.5 சதவீத வாக்குகளும் பதிவானது.
  ஊராட்சிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை 71.97 சதவாக்குகள் பதிவாகி இருந்தன. ஆக மொத்தம் மாவட்டத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலில் 81 சதவீத வாக்குகள் பதிவானது. திங்கள் கிழமை நடைபெற்ற முதல் கட்ட வாக்குப் பதிவில் 82.39 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.