காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

வாக்குச் சாவடியில் மோதல் - அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்

திண்டுக்கல், அக். 19: வாக்குச் சாவடியில் அதிமுக-திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகி தாக்குதலுக்கு ஆளானதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   திண்டுக்கல் ஆறா

Updated On :19 செப்டம்பர் 2012, 11:58 pm

திண்டுக்கல், அக். 19: வாக்குச் சாவடியில் அதிமுக-திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகி தாக்குதலுக்கு ஆளானதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  திண்டுக்கல் ஆறாவது வார்டுக்கான வாக்குச் சாவடி கோவிந்தாபுரம் மயானச சாலை நூற்றாண்டு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. காலை வாக்குப் பதிவு தொடங்கி சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு அதிமுக வாக்குச் சாவடி முகவர் செல்வம் என்பவருக்கும் திமுகவினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு பின்னர் அடிதடியில் முடிந்தது. இதனால் தான் தாக்கப்பட்டதாகக் கூறி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செல்வம் சேர்ந்து கொண்டார். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுகவினர் புகார் செய்தனர்.

   இது குறித்து அறிந்த இரு கட்சிகளைய் சேர்ந்த நிர்வாகிகள் வாக்குச் சாவடிக்கு வந்து சம்பந்தப்பட்டவர்களை சமாதானப்படுத்தினர். இதன் காரணமாக சில நிமிடங்கள் வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.