காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

திண்டுக்கல்லில் இருந்து மின்சார ரயில் இன்று துவக்கம்

திண்டுக்கல், செப்.6: திண்டுக்கல்லில் இருந்து முதல் மின்சார ரயில் இன்று இயக்கப்பட்டது. சென்னையில் இருந்து முதலில் விழுப்புரம் வரையிலும் பின்னர் திருச்சி வரையிலும் நீட்டிக்கப்பட்ட மின்சார ரயில் சேவை தற்

Updated On :20 செப்டம்பர் 2012, 12:15 am

திண்டுக்கல், செப்.6: திண்டுக்கல்லில் இருந்து முதல் மின்சார ரயில் இன்று இயக்கப்பட்டது.

சென்னையில் இருந்து முதலில் விழுப்புரம் வரையிலும் பின்னர் திருச்சி வரையிலும் நீட்டிக்கப்பட்ட மின்சார ரயில் சேவை தற்போது திண்டுக்கல் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டி, இன்று முதல் மின்சார ரயில் எஞ்சினுடன் திண்டுக்கல்லில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் இயக்கி வைக்கப்பட்டது. மதுரையில் இருந்து திண்டுக்கல் வரை டீசல் எஞ்சினுடன் வந்த வைகை எக்ஸ்பிரஸ், திண்டுக்கல்லில் இருந்து மின்சார ரயில் எஞ்சின் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இன்று முதல், குருவாயூர் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், திண்டுக்கல் - திருச்சி பாசஞ்சர் உள்ளிட்ட ரயில் வண்டிகள் மின்சார ரயில் எஞ்சின் பொருத்தப்பட்டு திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.