4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

கடையநல்லூர்.ஏப்.13: கடையநல்லூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டினை ஒட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிச

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:36 pm

குமார்

கடையநல்லூர்.ஏப்.13: கடையநல்லூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டினை ஒட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

புத்தாண்டினை ஒட்டி வெள்ளிக்கிழமை காலை நடை திறக்கப்பட்டது. காலை 9 மணிக்கு அபிஷேகமும்,9.30க்கு பல்வகை கனிகளால் சிறப்பு அலங்காரமும்,12 மணிக்கு சிறப்பு பூஜைகளும்,தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றன.கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்திருந்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின் பேரில் கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் தர்மராஜ்,கணக்கர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.