புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வங்கியில் இருந்து வந்தவரிடம் ரூ.3 லட்சம் பறித்து மர்ம நபர் தலைமறைவு

ஈரோடு, ஏப்.19: ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மிக அருகில், ஒரு வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வந்தவரிடம் இருந்து ரூ. 3 லட்சத்தைப் பறித்துக் கொண்டு மர்ம நபர் தலைமறைவானார். ஈரோடு அருகே வில்வரசம்ப

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:43 pm

ஜபலின் ஜான்

ஈரோடு, ஏப்.19: ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மிக அருகில், ஒரு வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வந்தவரிடம் இருந்து ரூ. 3 லட்சத்தைப் பறித்துக் கொண்டு மர்ம நபர் தலைமறைவானார்.

ஈரோடு அருகே வில்வரசம்பட்டியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 48). நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் இன்று பிற்பகல் பெருந்துறை சாலையில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு தன்னுடைய காரில் கதவைத் திறந்துகொண்டு அமர்ந்தார். அப்போது டூவீலர் வண்டியில் வந்த மர்ம நபர் ஒருவர், பெருந்துறைக்குச் செல்வதற்கு வழி என்ன என்று கேட்டார். அவருக்கு பதில் சொல்வதற்காக தன் ஓட்டுநர் பக்கம் திரும்பி வழி தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் காருக்குள் கை விட்டு பணத்தை பறித்துக் கொண்டு அந்த நபர் டூ வீலரில் வேகமாகச் சென்று மறைந்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே நடந்த இந்தப் பணப் பறிப்புச் சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.