விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் வேனும் அரசுப் பேருந்தும் மோதி விபத்து : இருவர் பலி

காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சென்ற வேனும், சங்கரன்கோயிலில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில்...

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:07 am

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக., 30 : மதுரையில் இருந்து நெல்லை மாவட்டம் சுரண்டைக்கு காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சென்ற வேனும், சங்கரன்கோயிலில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

ராஜபளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வன்னியம்படி விளக்கு அருகே வேனும், அரசு பேருந்தும் நேரக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் வேன் ஓட்டுநர் நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் என்ற இடத்தைச் சேர்ந்த காளைப்பெருமாள் நாடார் மகன் கனகராஜ் (30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

வேன் மீது மோதிய வேகத்தில் அரசு பேருந்து நிலைத்தடுமாறி சாலை ஓரம் ஓடியது. இதையறிந்து பேருந்து எங்காவது சென்று மோதி விபத்துக்குள்ளாகும் என்று அறிந்து பேருந்தின் இறுதிச் சீட்டில் அமர்ந்திருந்த விருதுநகர் மாவட்டம் செட்டியார்பட்டி தங்கசாமி நாடார் மகன் வேல்ராஜ் (42)  பேருந்தில் இருந்து குதித்துள்ளார். இவர் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறி நின்றது. இதில் வேல்ராஜ் பலியானார்.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 12 பேர் பலத்த காயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வன்னியம்பட்டி போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.