ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலத்தில் காவலாளி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

சேலம் ஏளம்பிள்ளை அருகே காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

News image
Updated On :4 டிசம்பர் 2012, 8:06 am

தங்கராஜா

சேலம் ஏளம்பிள்ளை அருகே காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

சேலத்தை அடுத்த ஏளம்பிள்ளையைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் (70). அதேப் பகுதியைச் சேர்ந்த ரவி,  தனபால் என்ற சகோதரர்களுக்கு சொந்தமான தறிப்பட்டறையில் அப்துல் அஜிஸ் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், தறிப்பட்டறையில் கடந்த 3.1.2010 அன்று மர்மமான முறையில் அப்துல் அஜிஸ் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மகுடன்ஜாவடி போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், தறி உரிமையாளர்களான ரவிக்கும், அவரது சகோதரருக்கும் ஏற்பட்ட சொத்து தகராறில், தறியை அடித்து உடைக்க ரவி மற்றும் அவரது நண்பர் சுந்தரம் ஆகியோர் அன்றைய தினம் தறிப்பட்டறைக்கு வந்ததும், அவர்களை காவலாளி அப்துல் அஜீஸ் தடுத்ததால், கோபத்தில் அவரைக் கொன்றதும் தெரிய வந்தது.

சேலம் 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, இன்றைய தினம் நீதிபதி சிவஞானம் தீர்ப்பளித்தார். தீர்ப்பில், கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ரவி மற்றும் சுந்தரத்துக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், ரவிக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும், அந்த அபராதத் தொகை உயிரிழந்த அப்துல் அஜிஸ் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக வழங்குமாறும், அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், கூடுதலாக 6 ஆறு ஆண்டுகள் ரவி சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.