தருமபுரி சம்பவம் : சேலம் பொது மருத்துவமனையில் பல்வேறு அமைப்புகள் போராட்டம்
தருமபுரி சம்பவத்தைத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து, உயிரிழந்த பெண்ணின் உடல் வைக்கப்பட்டுள்ள சேலம் அரசு மருத்துவமனையில் 32 கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது.


தருமபுரி சம்பவத்தைத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து, உயிரிழந்த பெண்ணின் உடல் வைக்கப்பட்டுள்ள சேலம் அரசு மருத்துவமனையில் 32 கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது.
தர்மபுரி நாயக்கன்கொட்டாய் பகுதியில் தலித் மக்களின் குடிசைகள் எரிக்கப்பட்டதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அன்பு என்பவரின் பெண் மங்கம்மாள் (20) உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு உயிரிழந்தார்.
இந்த நிலையில், அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சேலம் அரசு பொது மருத்துவனையில் குவிந்துள்ள விடுதலை சிறுத்தைகள் அமைப்பு உட்பட 32 கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள், நத்தம் கிராமத்தில் தலித் குடிசைகளுக்குத் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், குடிசைகளை எரித்த மற்றக் சாதிக்காரர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும், தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், இவற்றை நிறைவேற்றாவிட்டால், உயிரிழந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 32 சாதியக் கட்சி அமைப்புகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...