கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் : யுவராஜா வலியுறுத்தல்
உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசை கலைக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.யுவராஜா வலியுறுத்தினார்.


உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசை கலைக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.யுவராஜா வலியுறுத்தினார்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டால் 75 கோடி பேர் பயன்பெறுவார்கள். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும். இடைத்தரகர்களின் ராஜ்ஜியம் ஒழிக்கப்படும். மத்திய அரசின் இந்த நல்ல முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதியுள்ளார். எனவே, இதற்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தர வேண்டும்.
வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. ரேஷன் பொருள்கள், உரம், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து மானியங்களும் இனிமேல் நேரடியாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் ஏழைகள் மிகுந்த பயன் அடைவார்கள். எதிர்காலத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் வழங்கப்படும் ஊதியம் கூட வங்கிக்கணக்கில் வரவு வைக்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை உதவித்தொகை கிடைக்கும்.
காவிரி டெல்டா பாசன பகுதியில் சம்பா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழக அரசு வைத்துள்ள கோரிக்கைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி கர்நாடக-தமிழக முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும்கூட ஒரு சொட்டு தண்ணீர்கூட தரமாட்டோம் என கர்நாடக அரசு அறிவித்துவிட்டது.
அங்கு விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து அங்குள்ள கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. பிரதமர் உத்தரவையும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மதிக்காமல் தொடர்ந்து செயல்பட்டு வரும் கர்நாடக அரசை கலைக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...