ஈரோடு ரயில் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்
ஆலப்புழா ரயிலில் தண்ணீர் இல்லை என்று கூறி அதில் வந்த ஐயப்ப பக்தர்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆலப்புழா ரயிலில் தண்ணீர் இல்லை என்று கூறி அதில் வந்த ஐயப்ப பக்தர்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ஆலப்புழா ரயில் ஈரோடு ரயில் நிலையத்துக்கு இன்று காலை வந்த போது அதில் தண்ணீர் இல்லை என்று கூறி ஐயப்ப பக்தர்கள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து நிறுத்தி போராட்டம் செய்தனர். இவர்களது போராட்டத்தால், ரயிலில் இருந்த மற்ற பயணிகள் தங்களுக்கு வேலைக்குச் செல்ல நேரமாவதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக முக்கால் மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது ஆலப்புழா ரயில்.
வழக்கமாக ஈரோடு ரயில் நிலையத்துக்கு 10.15 மணிக்கு வந்து 10.30 மணிக்குப் புறப்படும் ரயில் 11.15 மணியளவில்தான் கிளம்பியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...