ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மின் விநியோகத்தில் பாரபட்சம்: ஸ்ரீவிலி.யில் மின்வாரிய அலுவலகம் முற்றுகை

ஸ்ரீவில்லிபுத்தூரில் சில பகுதிகளில் மின் விநியோகத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி, ஒரு பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். இதனால் அப் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :14 டிசம்பர் 2012, 3:20 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சில பகுதிகளில் மின் விநியோகத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி, ஒரு பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். இதனால் அப் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர், முதலியார்பட்டி தெரு பொது மக்கள் ஊர் தலைவர் முருகன் தலைமையில், ரயில்வே நிலையம் அருகேயுள்ள துணை மின்நிலையத்தை முற்றுகையிட்டனர். தங்கள் பகுதிக்கு மின் விநியோகத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி அவர்கள் இந்த திடீர் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர். நகரில் பகலில் 4 மணி நேரம் மின் விநியோகம் செய்தால், தங்கள் பகுதிக்கு 3 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
அங்கிருந்த உதவி பொறியாளர் பாஸ்கரன் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, உங்களது கோரிக்கையை மேலிடத்திற்கு தெரியப்படுத்தி சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்தார். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.