ஸ்ரீவிலி. அருகே ஸ்டவ் வெடித்ததில் இளம் தமபதியினர் சாவு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஸ்டவ் வெடித்ததில் தீக்காயம் அடைந்த இளம் தம்பதியினர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஸ்டவ் வெடித்ததில் தீக்காயம் அடைந்த இளம் தம்பதியினர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
விருதுநகர், பட்டம்புதூர் அருகேயுள்ள குப்பாம்பட்டியைச் சேர்ந்தவர் க.பாண்டி. இவரது மகள் ராஜலட்சுமி (23) யை, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வளையங்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சின்னசாமி மகன் கருப்பையா (29) என்பவருக்கு சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இவர்களுக்கு இரண்டரை வயதில் மகன் உண்டு.வியாழக்கிழமை வீட்டில் ராஜலட்சுமி சமையல் செய்ய ஸ்டவ் பற்றவைக்கும் போது வெடித்து சிதறியதாம்.
இதில் தீக்காயமுற்ற ராஜலட்சுமியை காப்பாற்ற முயன்ற கருப்பையாவும் காயமடைந்துள்ளார். இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
நத்தம்பட்டி காவல் நிலையத்தில் பாண்டி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...