ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலத்தில் கொலை வழக்குக் குற்றவாளிகள் 9 பேருக்கு ஆயுள் தண்டனை

சேலத்தில், கொலை வழக்கு ஒன்றில், 9 குற்றவாளிகளுக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

News image
Updated On :20 டிசம்பர் 2012, 7:39 am

தங்கராஜா

சேலத்தில், கொலை வழக்கு ஒன்றில், 9 குற்றவாளிகளுக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் முனுசாமி (48), தனியாருக்கு சொந்தமான மால்கோ நிறுவனத்தில் பணிக்கு வேலையாட்களை அனுப்பும் ஒப்பந்ததாராக இருந்தார்.

ஆட்களை தேர்வு செய்வதில் அதேப் பகுதியைச் சேர்ந்த கோபாலக் கண்ணன் என்பவருக்கும் முனுசாமிக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. கோபாலக் கண்ணன் சொன்ன ஆட்களைத் தேர்வு செய்யாததால் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்படும்.

இந்த நிலையில், கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி கோபாலக் கிருஷ்ணன், சில ஆட்களுடன் சேர்ந்து முனுசாமியை கொலை செய்தார். இந்த வழக்கில் கோபாலக் கண்ணன் உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது காவல்துறை. வழக்கு விசாரணை  மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம்,  குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில், மேட்டூரைச் சேர்ந்த ரௌடி அன்புச்செல்வன்(40), கோபால கண்ணன் (32), பச்சியப்பன் (35), செந்தில்குமார் (29), அர்ஜூனன் (25), அறிவழகன் (27) முருகன் (26), மகேந்திரன் (24), மயில்சாமி (34) ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.24,500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட  2 பேர் மரணம் அடைந்தனர். மேலும் 2 நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.